தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஜன 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜனவரி 23, 1897 - சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். நேதாஜி (தலைவர்) என்று மக்களால் அழைக்கப்பட்டார். இந்தியர்களை ஒன்று திரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். 'ஜான்சி ராணிப் படை' என்று பெண்களுக்கென தனிப் பிரிவு ஏற்படுத்தி ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினார்.

ஜனவரி 24, 1924 - சி.பி.முத்தம்மா பிறந்த நாள்

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண். பாலின பாகுபாடுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பைப் பெற்றார். வெளிநாட்டுத் தூதர், உயர் ஆணையாளர் போன்ற பதவிகளையும் அலங்கரித்த முதல் இந்தியப் பெண் இவர்தான்.

ஜனவரி 24, 2009 - தேசிய பெண் குழந்தைகள் நாள்

நம் நாட்டின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி ஜனவரி 24, 1966 இல் பதவி ஏற்றார். இதனை அடிப்படையாகக் கொண்டு, பெண் குழந்தைகளின் சுகாதாரம், வாழ்க்கைத் தரம், பாதுகாப்பு, சமூக கொடுமைகளைத் தடுத்தல், பாலின பாகுபாட்டைத் தடுத்தல் போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஜனவரி 25, 2011 - தேசிய வாக்காளர் நாள்

18 வயது நிரம்பிய இந்தியக் குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிப்பதைக் கடமையாகக் கருத வேண்டும். ஓட்டுரிமை என்பது ஒவ்வொருவரின் உரிமை என்பதை உணர வேண்டும். தேர்தல் ஆணையம் 60 ஆண்டுகள் நிறைவடைந்ததைச் சிறப்பிக்கும் வகையில் இந்த நாள் இந்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜனவரி 25 - இந்திய சுற்றுலா நாள்

சுற்றுலா என்பது பல்வேறு மக்களை ஒன்று சேர்ப்பதோடு, அனைவருக்கும் புரிதலை ஏற்படுத்த உதவுகிறது. சுற்றுலா சார்ந்த விழிப்புணர்வு, கலாசார பாரம்பரியம் சார்ந்த தகவல்களை மக்களிடம் கொண்டு செல்லவும், சுற்றுலாத் தளங்கள் மாசு அடையாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் இந்திய அரசால் கொண்டாடப்படுகிறது.

ஜனவரி 26, 1950 - இந்தியக் குடியரசு நாள்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம். மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய அரசியல் சட்டத்தை இந்திய அரசு ஏற்றுக் கொண்ட நாள் குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us