sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் சேதி

/

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : பிப் 05, 2018

Google News

PUBLISHED ON : பிப் 05, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்ரவரி 6, 1975 - ஆர்குட் புயுக்கோக்டன் பிறந்த நாள்

துருக்கி நாட்டு மென்பொறியாளர். 2009 வரை பிரபலமாக இருந்த 'ஆர்குட்' சமூக வலைதளத்தைத் உருவாக்கினார். 2004இல் கூகுள் நிறுவனத்தால் தொடங்கி வைக்கப்பட்டு, 2014இல் கலைக்கப்பட்டது.

பிப்ரவரி 7, 1877 - ஜி.எச்.ஹார்டி பிறந்த நாள்

இந்தியாவின் ராமானுஜத்தை கணித உலகுக்கு அறிமுகம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கணித வல்லுநர். எண் தேற்றம், கணிதப் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார்.

பிப்ரவரி 7, 1902 - தேவநேயப் பாவாணர் பிறந்த நாள்

'மொழிஞாயிறு' என்று அறியப்படும் தமிழறிஞர். பல மொழிகளின் இலக்கணங்களைக்

கற்றுத் தேர்ந்திருந்தார். பல தமிழ் அறிஞர்கள் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். 'தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியின் தந்தை' எனவும் போற்றப்படுகிறார்.

பிப்ரவரி 8, 1834 - டிமிட்ரி மெண்டிலீவ் பிறந்த நாள்

கனிம அட்டவணையின் தந்தை. வேதியியல் தனிமங்களின் அணு நிறையைக் கொண்டு ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார். அவரது காலத்தில் கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளையும் வரையறுத்து சாதனை படைத்தார்.

பிப்ரவரி 8, 1897 - ஜாகிர் உசேன் பிறந்த நாள்

இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவர். பீஹார் ஆளுநர், குடியரசுத் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். பத்ம விபூஷண், பாரத ரத்னா விருதுகளை மத்திய அரசு வழங்கிச் சிறப்பித்துள்ளது.

பிப்ரவரி 11, 1847 - தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த நாள்

'கண்டுபிடிப்புகளின் தந்தை'. தனது வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளுக்காகவே வாழ்ந்து சுமார் 1300 கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் காட்டினார். இவரது உடலை அடக்கம் செய்யும்போது, அமெரிக்கா முழுவதும் ஒரு நிமிடம் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us