sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் சேதி

/

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : பிப் 19, 2018

Google News

PUBLISHED ON : பிப் 19, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்ரவரி 19, 1855 - உ.வே. சாமிநாத ஐயர் பிறந்த நாள்

'தமிழ்த் தாத்தா' என்று கொண்டாடப்படும் தமிழறிஞர். பழந்தமிழ் ஏடுகளைத் தேடிப் பதிப்பிக்கும் பணியை மேற்கொண்டார். 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டு, 3,000க்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும், கையெழுத்துப் பிரதிகளையும் அரும்பாடுபட்டுச் சேகரித்தார்.

பிப்ரவரி 21, 1894 - சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பிறந்த நாள்

இந்திய இயற்பியலாளர். 'இந்திய அறிவியல் தொழிலக ஆய்வகங்களின் தந்தை' என அழைக்கப்படுகிறார். பெட்ரோலியக் கழிவுகளைப் பயன்படு பொருளாக மாற்றுவதற்கு வழிமுறைகள் கண்டறிந்தார். இந்திய அரசு இவருக்கு 'பத்ம பூஷண்' விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

பிப்ரவரி 21, 1999 - அனைத்துலகத் தாய்மொழி நாள்

1952இல் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில், வங்காள மொழியை அரசு நிர்வாக மொழியாக ஆக்கக் கோரி போராட்டம் நடந்தது. அதில் உயிர் நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்த நாளை அனுசரிக்க யுனெஸ்கோ அறிவித்தது.

பிப்ரவரி 22, 1857 - பேடன் பவல் பிறந்த நாள்

மாணவ, மாணவியருக்கு நற்புண்புகளை வளர்க்க சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். 'ஸ்கெளட்டிங் ஃபார் பாய்ஸ்' என்கிற நூலை எழுதியுள்ளார். உலகம் முழுவதும் வேகமாக சாரணர் இயக்கம் பரவியதால், 28 நாடுகள் இவருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன.

பிப்ரவரி 23, 1965 - மைக்கேல் டெல் பிறந்த நாள்

'டெல்' என்கிற கணினி நிறுவனத்தின் தலைவர். 15 வயதிலேயே கணினியைக் கழற்றி, பொருத்தி, வடிவமைப்பது குறித்தும், வர்த்தக ரீதியாகவும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டார். 27 வயதில் 'மிக இளமையான தலைமைச் செயல் அதிகாரி' என்று ஃபார்ச்சூன் இதழால் பெருமைப்படுத்தப்பட்டார்.

பிப்ரவரி 24, 1955 - ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த நாள்

கணினித் துறையில் குறிப்பிடத்தக்கவர். ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்துள்ளார். மின்னணு சாதனங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டதால், ஐபோன், ஐபாட் போன்ற நவீன சாதனங்கள் உருவாகக் காரணமாக இருந்தார்.






      Dinamalar
      Follow us