sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

வானியல் முன்னோடி

/

வானியல் முன்னோடி

வானியல் முன்னோடி

வானியல் முன்னோடி


PUBLISHED ON : பிப் 19, 2018

Google News

PUBLISHED ON : பிப் 19, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிகோலஸ் கோபர்னிகஸ்

1473 - 1543, போலந்து


அன்றைய காலகட்டம் சமய நம்பிக்கைகளுக்கு எதிராக இருக்குமென்பதால், தன் கருத்தை வெளியில் சொல்ல யோசித்தார். இறப்பதற்குச் சில காலம் முன்னதாக அந்த அறிக்கையை வெளியிட்டார். அவர் நினைத்ததுபோல அதை யாரும் ஏற்கவில்லை. மாறாக, அவரது சிந்தனையை முட்டாள்தனம் என்று சமகால அறிவியலாளர்களும் சொன்னார்கள். அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்தே அவருக்குப் பின்னால் வந்த வானியல் அறிஞர்களான கலிலியோவும் கெப்ளரும் தொடர்ந்து ஆய்வுகள் செய்து, வானியலின் உண்மைகளை வெளிக்கொண்டு வந்தனர். அதன்பிறகு பல ஆண்டுகள் கழித்தே அவர் சொன்ன கருத்துகளை உலகம் ஏற்றுக்கொண்டது. 'சூரியனை மையமாகக் கொண்டே பூமி உள்ளிட்ட கோள்கள் இயங்குகின்றன' என்கிற புரட்சிகரமான கருத்தைச் சொன்னவர் நிகோலஸ் கோபர்னிகஸ்.

நிகோலஸ் பலதுறை அறிஞர். 18 வயதிலேயே வானியல், கணிதம், தத்துவம், புவியியல், அறிவியல் குறித்த ஏராளமான நூல்களைப் படித்து முடித்தார். மருத்துவமும் தெரியும். மொழி அறிஞராகவும் இருந்தார். பொருளாதாரத்திலும் மேதை. தொடக்கத்தில் பாதிரியாராக இருந்ததால், கத்தோலிக்க தேவாலயங்களின் சட்ட விதிமுறைகளைப் படிக்க இத்தாலி சென்றார். அங்கே சட்டம் பயின்றாலும், அதிகநேரம் வானியல் ஆராய்ச்சிகளுக்கே செலவிட்டார்.

தொலைநோக்கி போன்ற எந்தக் கருவிகளும் இல்லாமல் வானியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அதற்கு முன்புவரை 'பூமிதான் பிரபஞ்சத்தின் மத்தியில் இருக்கிறது, சூரியன், மற்ற கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை பூமியைச் சுற்றி வருகின்றன' என்ற கருத்தை நம்பிவந்தனர். நிகோலஸ் புவி மையக் கோட்பாட்டை மறுத்து, சூரிய மையக் கோட்பாட்டை முன்நிறுத்தினார். கணித அடிப்படையில் அனைத்துக் கோள்களும் சூரியனையே சுற்றி வருகின்றன என்று கூறினார்.

தனது ஆய்வுகளை On the Revolutions of the Heavenly Spheres என்ற நூலாக எழுதினார். இவ்வாறு, வானத்தைப் பார்த்துப் பார்த்து, ஆராய்ச்சி செய்து பல ரகசியங்களைச் சொன்ன நிகோலஸை, வானத்தைப் பார்க்கும்போதெல்லாம் நினைவுகூர வேண்டும்.






      Dinamalar
      Follow us