sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

பயிற்சி முக்கியம்!

/

பயிற்சி முக்கியம்!

பயிற்சி முக்கியம்!

பயிற்சி முக்கியம்!


PUBLISHED ON : பிப் 19, 2018

Google News

PUBLISHED ON : பிப் 19, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'நினைவாற்றலை வளர்த்துக்கொள்வது எப்படி?' என்ற தலைப்பில் வாலாஜாபாத், அகத்தியா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள், கவனகரும், நினைவாற்றல் பயிற்சியாளருமான 'திருக்குறள்' எல்லப்பனுடன் உரையாடினார்கள்.

'திருக்குறள்' எல்லப்பன்

நினைவாற்றல் எல்லோருக்கும் முக்கியமானது. மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது. பொதுவாக, முக்கியமான விஷயங்களும், நமக்கு ஆர்வமான விஷயங்களும் எளிதில் மனசுல பதிஞ்சுடும். ஆனா, சில விஷயங்கள நாம் ஞாபகம் வெச்சுக்கறதுல சிரமம் இருக்கு. அதுக்கு முக்கியமா செய்ய வேண்டியது தொடர் முயற்சி. தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் செய்து வந்தால், நினைவாற்றலை அற்புதமா வளர்த்துக்கலாம். நீங்க உங்க நினைவாற்றலைப் படிப்புக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தறீங்கன்னு சொல்லுங்க.

இ.லிங்கேஸ்வரன், 10ஆம் வகுப்பு

எந்த சப்ஜெக்ட்ல வீக்கா இருக்கேனோ அதை அதிகநேரம் படிப்பேன். ஆங்கிலத்துல இருக்கற பாடத்தை தமிழ்ல மொழிபெயர்த்துப் புரிஞ்சுக்குவேன். அதுக்குப் பிறகு ஆங்கிலத்துல படிக்கும்போது ஈசியா இருக்கும்.

சு.புவனேஷ், 9ஆம் வகுப்பு

படிச்சதை திரும்பத்திரும்ப எழுதிப் பார்ப்பேன். அதனால நல்லா ஞாபகத்துல இருக்கும். தமிழ்ப் பாடல்களின் அர்த்தங்களை தெரிஞ்சுக்கிட்டுப் படிச்சா புரிஞ்சுடும். நிறைய முறை வாய்விட்டுச் சொல்லிப் படிச்சா எப்பவுமே மறக்காது.

இரா.ஜெயந்த், 8ஆம் வகுப்பு

கணக்கு தவிர மத்த பாடம் எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணியும், எழுதியும் பார்த்துப்பேன். கணக்குகளை நிறைய முறை போட்டுப் பார்ப்பேன். நல்லா மனப்பாடம் செஞ்சிருந்தாலும் சில நேரத்துல கேள்வித்தாளை பார்த்தா பதில் மறந்து போயிடுது.

ரா.திவ்யா, 10ஆம் வகுப்பு

தொடர்ந்து படிச்சிட்டே இருக்க மாட்டேன். நடுவுல கொஞ்சம் நேரம் இடைவெளி விட்டு அப்புறம் படிப்பேன். காலையில எழுந்து படிக்கற எல்லாமே நல்லா மனசுல பதிஞ்சுடும். அதனால ராத்திரி சீக்கிரம் தூங்கி, காலையில சீக்கிரமா எழுந்து படிப்பேன்.

மு.அபிநயா, 8ஆம் வகுப்பு

பாடங்களைப் புரிஞ்சுக்கிட்டு படிப்பேன். அதனால பாடங்கள் என்னைக்கும் மறக்காது. சந்தேகங்களைக் குறிப்புகளா எடுத்து வெச்சுக்கிட்டு டீச்சர் கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குவேன். மறுபடி அந்தப் பாடங்களை படிக்கறப்ப நல்லா ஞாபகம் இருக்கும்.

சு.புவனஸ்ரீ, 9ஆம் வகுப்பு

கேள்விகளுக்கான பதில்களை பலமுறை எழுதிப் பார்ப்பேன். ஒவ்வொண்ணா நினைவுக்குக் கொண்டு வந்து திரும்பத்திரும்ப எழுதறதால எந்தப் பாடமும் மறக்காது. மனப்பாடம் பண்ணி, எழுதிப் பாக்கறது ஞாபகசக்தியை அதிகரிக்குது.

'திருக்குறள்' எல்லப்பன்:

நினைவாற்றலை எல்லோரும் வளர்த்துக்கலாம். பாடத்தைப் புரிஞ்சுக்கிட்டீங்கன்னா எப்பவும் மறக்காது. பாடம் தொடர்பான விஷயங்களைக் காட்சியா பார்த்தாலும் எளிதில் மனசுல பதியும். அதிகாலையில் வாசிக்கறது சிறப்பான வழிமுறை. தொடர்ந்து பயிற்சி செய்தா, பாடங்கள் மட்டுமில்லாம நினைவாற்றலை நல்லா வளர்த்துக்கலாம். இது எல்லோராலயும் முடியும்.






      Dinamalar
      Follow us