sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 09, 2026 ,பங்குனி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் சேதி

/

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : மார் 05, 2018

Google News

PUBLISHED ON : மார் 05, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 6, 1937 - வேலன்டினா டெரெஷ்கோவா பிறந்தநாள்

விண்வெளியில் பறந்த முதல் ரஷ்ய பெண் என்ற பெருமை பெற்றார். 3 நாட்களில் 48 முறை பூமியைச் சுற்றி வந்தார். சோவியத் யூனியனின் 'ஆர்டர் ஆஃப் லெனின்' விருது பெற்றிருக்கிறார்.

மார்ச் 7, 1765 - ஜோசப் நைஸ்போர் நிப்ஸ் பிறந்தநாள்

பிரான்ஸ் நாட்டு கண்டுபிடிப்பாளர். நிரந்தரமாக உருவம் பதியும் கேமராவைக் கண்டுபிடித்தார். புகைப்படக் கலையை உலகிற்கு வழங்கிய லூயிஸ் டாகுரே என்பவருடன் இணைந்து ஆராய்ச்சி செய்தார்.

மார்ச் 8, 1946 - அனைத்துலக மகளிர் நாள்

தாய் நாடு, தாய் மொழி என பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். அதுபோல பெண்களுக்கு சம உரிமையுடன் பாதுகாப்பையும் வழங்க வேண்டும். பெண்களைப் போற்ற இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மார்ச் 9, 1454 - அமெரிக்கோ வெஸ்புகி பிறந்தநாள்

இத்தாலி கடல் பயணி. கடற்பயணத்தில் தென் அமெரிக்கா உட்பட பல புதிய இடங்களைக் கண்டுபிடித்து உலகப்புகழ் பெற்றார். ஆகவே, இவரது பெயர் அமெரிக்காவுக்குச் சூட்டப்பட்டது.

மார்ச் 9, 1934 - யூரி ககாரின் பிறந்தநாள்

விண்வெளியில் பயணித்து, விண்ணில் வலம்வந்த முதல் விண்வெளி வீரர். வாஸ்டோக் 1 என்ற விண்கலத்தில் பயணம்செய்து, 108 நிமிடங்கள் விண்வெளியில் நடந்தார். ரஷ்யாவில் பல தெருக்களுக்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மார்ச் 10, 1933 - பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்தநாள்

வாழ்நாள் முழுதும் தமிழர், தமிழ், தமிழ்நாடு ஆகியவற்றின் வளர்ச்சியை முன்னிறுத்தி வாழ்ந்தார். 'தமிழ்த் தேசியத் தந்தை' என்று தமிழர்களால் போற்றப்படுகிறார். மக்கள் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்று குரல் கொடுத்தார்.






      Dinamalar
      Follow us