
மார்ச் 20, 2010 - உலக சிட்டுக்குருவிகள் நாள்
சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. பொதுவான உயிரியல் பல்வகைமையின் முக்கியத்துவம் அறிய இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
மார்ச் 21, 1971 - உலக வன நாள்
நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்திருக்கும் வரமே மரங்கள். வனங்கள் அழிக்கப்படுவதால் உலகின் வெப்பநிலை கூடுகிறது. வனங்களின் அவசியத்தை உணர்த்த இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
மார்ச் 21, 2003 - உலக பொம்மலாட்ட நாள்
'கூத்து' வகையைச் சேர்ந்த பழமையான மரபுவழிக் கதைகளில் இதுவும் ஒன்று. உலகம் முழுவதும் வாழும் பொம்மலாட்டக் கலைஞர்களைக் கௌரவிக்க இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
மார்ச் 22, 1992 - உலக நீர் நாள்
'நீரின்றி அமையாது உலகு' என்பதற்கேற்ப அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பது தண்ணீர். அதன் தேவை, முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்தில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
மார்ச் 23, 1893 - ஜி.டி.நாயுடு பிறந்த நாள்
அறிவியல் மேதை, கண்டுபிடிப்பாளர். 'இந்தியாவின் எடிசன்' என்று போற்றப்பட்டார். விவசாயத்தில் பல சாதனைகள் புரிந்தார். பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுடன் பல தொழிற்சாலைகளையும் தொடங்கினார்.
மார்ச் 24, 1733 - ஜோசப் பிரிஸ்ட்லி பிறந்த நாள்
ஆக்சிஜனைக் கண்டுபித்து புகழ்பெற்ற ஆங்கிலேய வேதியியல் அறிஞர். சிறந்த ஆசிரியராகவும் மெய்யியல் அறிஞராகவும் திகழ்ந்தார். கார்பன்-டை-ஆக்சைடு பற்றிய இவரது ஆய்வுகளும் முக்கியமானவை.

