தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : மே 14, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 14, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 15, 1859: பியரி கியூரி பிறந்த நாள்

பிரெஞ்சு இயற்பியலாளர். மனைவி மேரி கியூரியுடன் இணைந்து ரேடியம் பொலோனியம் தனிமங்களைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார். கதிரியக்கத்தைக் கண்டறிந்ததற்காக இயற்பியலில் நோபல் பரிசு வென்றார்.

மே 15, 1987: ஆண்டி முர்ரே பிறந்த நாள்

ஸ்காட்லாந்து டென்னிஸ் வீரர். ஏ.டி.பி. தரவரிசையில் 39வது இடத்தில் உள்ளார். 2012இல் யூ.எஸ். ஓபன், 2013, 2016இல் விம்பிள்டன் ஆகியவற்றில் பட்டம் வென்றுள்ளார்.

மே 17, 1749: எட்வர்ட் ஜென்னர் பிறந்த நாள்

மருத்துவர், அறிவியலாளர். பெரியம்மை நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்து, காப்புரிமை பெறாமல் இலவசமாக வழங்கினார். 'நோய்த் தடுப்பூசிகளின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார்.

மே 17, 1934: உலக தொலைத் தொடர்பு நாள்

உலகை ஒன்றாக இணைத்ததில் தொலைத்தொடர்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. உலக தந்தி சங்கம் தொடங்கப்பட்டதன் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மே 18, 1872: பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் பிறந்த நாள்

பிரிட்டன் சிந்தனையாளர், கணித மேதை, தத்துவஞானி. இவரது புத்தகங்கள் கணித, தத்துவ உலகில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தின. 1950இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

மே 19, 1934: ரஸ்கின் பாண்ட் பிறந்த நாள்

இந்திய எழுத்தாளர். குழந்தைகளுக்காக ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் முன்னோடி. 1992இல் சாகித்திய அகாதமி விருதும், பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் விருதுகளும் பெற்றுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us