தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஜூன் 18, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 18, 1908 - கக்கன் பிறந்த நாள்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர். தலைசிறந்த அரசியல்வாதியாகவும் நேர்மையின் வடிவமாகவும் திகழ்ந்தார். இந்திய அரசு இவரைச் சிறப்பித்து அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

ஜூன் 19, 1945 - ஆங் சான் சூச்சி பிறந்த நாள்

மியான்மரில் மக்களாட்சியை ஏற்படுத்த அஹிம்சை வழியில் போராடினார். அதற்காக 21 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். 2010இல் விடுதலையானார். 1991இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார்.

ஜூன் 19, 1947 - சல்மான் ருஷ்டி பிறந்த நாள்

புகழ்பெற்ற புதின எழுத்தாளர். 'மிட்நைட்ஸ் சில்ரன்' என்கிற நாவலுக்காக புக்கர் பரிசு பெற்றிருக்கிறார். இலக்கியச் சேவைகளுக்காக 2007இல் இவருக்கு, இங்கிலாந்து அரசு 'சர்' பட்டம் வழங்கி கௌரவித்தது.

ஜூன் 20, 2000 - உலக அகதிகள் நாள்

போர், கலவரம், இயற்கைப் பேரழிவு போன்ற காரணங்களால் மக்கள் பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து அகதிகள் ஆகின்றனர். அவர்களின் உரிமையைப் பாதுகாக்க இந்த நாளை ஐ.நா. சபை அறிவித்தது.

ஜூன் 21, 1987 - பன்னாட்டு யோகா நாள்

யோகா இந்தியாவில் தோன்றிய ஒரு கலை. உடலையும் உள்ளத்தையும் நலமாக வைக்க யோகா அவசியம் என்பதை முன்வைத்து, சர்வதேச யோகா கூட்டமைப்பு இந்த நாளைக் கடைப்பிடித்து வருகிறது.

ஜூன் 23, 2003 - ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை நாள்

நல்லொழுக்கத்தின் அடையாளம் பிறருக்குச் செய்யும் சேவை. இதை ஊக்குவிக்கவும் சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கவும் ஐ.நா. சபையால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us