தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஜூலை 02, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 02, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை 2, 1958 - மயில்சாமி அண்ணாதுரை பிறந்தநாள்

தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி. நிலவை ஆராய இஸ்ரோ அனுப்பிய 'சந்திரயான்' செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநர். 'கையருகே நிலா' என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார்.

ஜூலை 3, 1980 - ஹர்பஜன் சிங் பிறந்தநாள்

கிரிக்கெட் பந்து வீச்சாளர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 32 விக்கெட்டுகள் வீழ்த்தி, அணியில் தவிர்க்க முடியாத வீரரானார். ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய முதல் இந்தியர்.

ஜூலை 4, 1790 - ஜார்ஜ் எவரெஸ்ட் பிறந்தநாள்

புவியியல் வல்லுநர். எவரெஸ்ட் சிகரத்தைக் கண்டறிந்து, கடல் மட்டத்தில் இருந்து 8,848 மீட்டர் உயரத்தில் இருக்கிறது என்று கணக்கிட்டார். பிரிட்டிஷ் அரசால் 'சர்' பட்டம் வழங்கப்பெற்றார்.

ஜூலை 6, 1885 - உலக ஜூனோசிஸ் நாள்

விலங்குகளுக்கு ஏற்படும் வியாதி. இது பூனை, நாய், எலி, பறவைகள் மூலம் மனிதர்களுக்கும் பரவுகிறது. விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

ஜூலை 6, 1870 - பரிதிமாற் கலைஞர் பிறந்தநாள்

தமிழறிஞர். நாவல், நாடகம், கவிதை, ஆய்வுநூல், நாடக இலக்கண நூல் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இயற்பெயர் சூரியநாராயண சாஸ்திரி. சென்னைச் செந்தமிழுரைச் சங்கத்தை நிறுவினார்.

ஜூலை 8, 1972 - சௌரவ் கங்குலி பிறந்தநாள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். அறிமுகப் போட்டியிலேயே 131 ரன்கள் குவித்தார். 'தாதா' என்று கொண்டாடப்படும் இவருக்கு, 2004இல் 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us