தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஜூலை 16, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை 16, 1968 - தன்ராஜ் பிள்ளை பிறந்த நாள்

இந்திய ஹாக்கி வீரர். அணியின் தலைவராகவும் இருந்தார்.15 ஆண்டுகள் விளையாடி,170 கோல்களை அடித்த பெருமைக்குரியவர். 2000இல் 'ராஜீவ் காந்தி கேல் ரத்னா' விருது பெற்றார்.

ஜூலை 17, 2010 - பன்னாட்டு நீதிக்கான உலக நாள்

போர்க் குற்றங்கள், இனப்படுகொலை போன்ற குற்றச் செயல்களை விசாரிக்க, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் இந்த நாள் தேர்வு செய்யப்பட்டுக் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஜூலை 18, 1918 - நெல்சன் மண்டேலா பிறந்த நாள்

நிறவெறிக்கு எதிராகப் போராடினார். மனித உரிமைக்கும், சுதந்திரத்துக்கும் ஆற்றிய பணியைக் கௌரவித்து, இவரது பிறந்தநாளை சர்வதேச மண்டேலா தினமாக ஐ.நா. சபை 2009இல் அறிவித்தது.

ஜூலை 19, 1827 - மங்கள் பாண்டே பிறந்த நாள்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர். 'சிப்பாய் புரட்சி' எனும் முதல் விடுதலைப் போராட்டத்துக்குக் காரணமாக இருந்தார். இவரது நினைவாக, 1984இல் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது.

ஜூலை 20, 1822 - கிரிகோர் மெண்டெல் பிறந்த நாள்

தாவரவியலாளர், மரபியலின் தந்தை. மரபியல் கூறுகளைக் கண்டறிய 8 ஆண்டுகளில், சுமார் 28,000 செடிகளை வளர்த்து, விதிகளை வரையறுத்தார். அந்த விதிகள் மெண்டலின் விதிகள் என்றே அறியப்படுகின்றன.

ஜூலை 20, 1969 - மனிதன் நிலவில் இறங்கிய நாள்

அப்பல்லோ 11 என்ற விண்வெளி ஓடத்தை 16.7.1969 அன்று அமெரிக்கா ஏவியது. இதில் பயணித்த ஆம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் 'ஈகிள்' எனும் சிறிய ரக ஓடத்தில் இறங்கி, இந்த நாளில்தான் நிலவில் கால் வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us