தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஜூலை 23, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை 23, 1856 - பாலகங்காதர திலகர் பிறந்த நாள்

இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை. 'சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதனை அடைந்தே தீருவேன்' என்று கூறி, சுதந்திரப் போராட்ட எண்ணத்தை மக்களிடம் விதைத்தார்.

ஜூலை 26, 1856 - ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த நாள்

உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர். இசை, இலக்கிய விமர்சகர். 60க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். இலக்கியத்துக்காக நோபல், திரைக்கதைக்காக ஆஸ்கர் விருதுகள் பெற்ற ஒரே படைப்பாளி.

ஜூலை 26, 1999 - கார்கில் போர் வெற்றி நாள்

காஷ்மீர் எல்லைப் பகுதியான கார்கிலில் ஊடுருவிய பாகிஸ்தான் மீது, இந்தியா தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றது. இதை நினைவுகூர இந்த நாளை இந்தியா கொண்டாடி வருகிறது.

ஜூலை 26, 2016 - உலக சதுப்புநிலக் காடுகள் நாள்

இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பேரழிவுகளைச் சதுப்புநிலக் காடுகள் தடுக்கின்றன. கடற்கரையை ஒட்டியுள்ள இந்த நிலங்களை அழியாமல் பாதுகாக்க யுனெஸ்கோ இந்த நாளை அறிவித்துக் கடைப்பிடித்து வருகிறது.

ஜூலை 28, 1948 - உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாள்

சுற்றுச்சூழல் பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. இதற்காகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் தொடங்கப்பட்டு, இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

ஜூலை 29, 2010 - சர்வதேச புலிகள் காப்பக நாள்

உலகெங்கும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் புலிகளுக்காக 49 காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புலிகள் இனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதை, இந்த நாள் வலியுறுத்துகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us