PUBLISHED ON : ஜூலை 23, 2018

அ நிறம் | அளவு
இங்கு ஔவையார், பாரதியார் எழுதிய ஆத்திசூடிப் பாடல்கள் கலந்து தரப்பட்டுள்ளன. யார் எதை எழுதியது என்று கண்டுபிடிக்க முடிகிறதா? பாருங்கள்.
அறம் செய விரும்பு
அச்சம் தவிர்
ஆறுவது சினம்
ஆண்மை தவறேல்
இயல்வது கரவேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஊக்கமது கைவிடேல்
ஊண் மிக விரும்பு
எண் எழுத்து இகழேல்
எண்ணுவது உயர்வு
சனிநீராடு
சரித்திரத் தேர்ச்சிகொள்
கூடிப்பிரியேல்
கூடித் தொழில் செய்
தீவினை அகற்று
தீயோர்க்கு அஞ்சேல்
நேர்பட ஒழுகு
நேர்படப் பேசு
வஞ்சகம் பேசேல்
வருவதை மகிழ்ந்துண்
விடை: முதல் வரி ஔவையார் பாடியது இரண்டாவது வரி பாரதியார் பாடியது
