தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : அக் 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 22, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்டோபர் 24, 1948 - ஐக்கிய நாடுகள் நாள்

உலகின் மிக உயர்ந்த அமைப்பாக ஐ.நா. சபை கருதப்படுகிறது. எதைப் பற்றியும் விவாதம் செய்வது, ஆராய்வது போன்ற உரிமைகளை இது கொண்டுள்ளது. இதன் சாதனைகளைக் கூறுவதே இந்த நாளின் நோக்கம்.

அக்டோபர் 24, 1921 - ஆர்.கே. லஷ்மண் பிறந்த நாள்

'திருவாளர் பொதுஜனம்' என்கிற கேலிச் சித்திரக் கதாபாத்திரத்தை வரைந்த இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியர். பத்மவிபூஷண், வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.

அக்டோபர் 25, 1881 - பாப்லோ பிகாசோ பிறந்த நாள்

ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர். 'கியூபிசம்' எனப்படும் புதிய ஓவிய பாணியை அறிமுகப்படுத்தினார். அமைதியின் அடையாளச் சின்னமாக ஆலிவ் இலைகள், புறாவை பிரபலப்படுத்தியது இவரே!

அக்டோபர் 27, 2005 - உலக ஒலி, ஒளி பாரம்பரிய நாள்

திரைப்படம், தொலைக்காட்சி போன்ற காணொலிக் காட்சிகளால் ஏற்படும் நன்மை, தீமை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கம். யுனெஸ்கோ அமைப்பு இந்த நாளை அங்கீகரித்தது.

அக்டோபர் 28, 1955 - பில் கேட்ஸ் பிறந்த நாள்

மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவர். முதன்மைச் செயல் அதிகாரியாகவும் மென்பொருள் வல்லுனராகவும் பணியாற்றினார். உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் 2ஆம் இடத்தில் இருக்கிறார்.

அக்டோபர் 28, 1955 - இந்திரா நூயி பிறந்த நாள்

'பெப்சி' நிறுவனத்தின் தலைவர். 2015இல் ஃபார்ச்சூன் இதழ் வெளியிட்ட உலகின் வலிமைமிக்க பெண்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். 2007இல் பத்மபூஷண் விருது பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us