PUBLISHED ON : நவ 19, 2018

நவம்பர் 19, 1917 - இந்திரா காந்தி பிறந்த நாள்
இந்தியாவின் முதல் பெண் பிரதமர். ஜவஹர்லால் நேருவின் மகள். கல்வி முறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதிரடியான ஆட்சி முறையில் 'இரும்பு பெண்மணி'யாகத் திகழ்ந்தார்.
நவம்பர் 19, 1828 - ராணி லட்சுமிபாய் பிறந்த நாள்
ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த ஜான்சியின் ராணி. இவரது வீரச் செயல்களைப் பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டார் கதைகள், நாடகங்கள் பல மொழிகளிலும் உள்ளன.
நவம்பர் 20, 1889 - எட்வின் ஹபிள் பிறந்த நாள்
அமெரிக்க வானியலாளர். 'பிரபஞ்சம் முழுமையும் விரிவடைகிறது' என்றார். இது, 'ஹபிள் விதி' எனப்படுகிறது. நவீன விண்வெளித் தொலைநோக்கிக்கு இவரது பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.
நவம்பர் 21, 1996 - உலக தொலைக்காட்சி நாள்
உலக நாடுகள் பாதுகாப்பு, பொருளாதாரம், கலை, கலாசாரம் போன்ற நிகழ்ச்சிகளைப் பரிமாறிக் கொள்ளவேண்டும். இதற்காக, ஐ.நா. சபையால் இந்த நாள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
நவம்பர் 23, 1921 - கவிஞர் சுரதா பிறந்த நாள்
உவமைக் கவிஞர். சுப்புரத்தினதாசன் என்ற பெயரைச் சுருக்கி 'சுரதா' என மாற்றிக்கொண்டார். இவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
நவம்பர் 24, 1859 - படிவளர்ச்சி நாள்
சார்லஸ் டார்வின், 'உயிரினங்களின் தோற்றம்' என்கிற நூலை 1859, நவம்பர் 24இல் வெளியிட்டார். இந்த நூல் வெளியிடப்பட்டதன் நினைவாக, இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
