தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : டிச 10, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 10, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிசம்பர் 10, 1950: மனித உரிமைகள் நாள்

மனிதர்களுக்குத் தேவையான, மறுக்கமுடியாத உரிமைகளே மனித உரிமை. இதை எல்லாத் தரப்பினரிடமும் வலியுறுத்த ஐ.நா. சபையால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

டிசம்பர் 11, 1882: சுப்ரமணிய பாரதி பிறந்தநாள்

தமிழின் மகாகவி. கவிதைகள் வாயிலாக மக்களின் மனத்தில் விடுதலை உணர்வை விதைத்ததால் 'தேசியக் கவி.' இவரது நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 12, 1981: யுவராஜ் சிங் பிறந்த நாள்

இந்தியக் கிரிக்கெட் வீரர். 2007, டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6 பந்துகளுக்கு 6 சிக்சர் இவரது சாதனை. அர்ஜூனா, பத்மஸ்ரீ விருதுகள் இவரைப் பெருமைப்படுத்தியுள்ளன.

டிசம்பர் 14, 1503: நாஸ்ட்ரடாமஸ் பிறந்த நாள்

வரலாற்று நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்தவர். இவரது கணிப்புகள் ஜோதிட முறைகளுக்கு அப்பாற்பட்டது. 'தி செஞ்சுரீஸ்' என்ற புகழ்பெற்ற புத்தகம் இவரது பங்களிப்பு.

டிசம்பர் 15, 1976: பாய்ச்சங் பூட்டியா பிறந்தநாள்

இந்தியக் கால்பந்து வீரர். அர்ஜுனா, பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் இவரது சாதனைக்கு மயிலிறகுகள். சிக்கிம், நாம்ச்சி நகரில் உள்ள விளையாட்டு அரங்கம் இவரது பெயரைத் தாங்கியுள்ளது.

டிசம்பர் 16, 1770: பீத்தோவன் பிறந்தநாள்

உலகின் மிகச்சிறந்த சிம்பொனி இசை வடிவங்களை வழங்கிய புகழ்பெற்ற ஜெர்மானிய இசை மேதை. பியானோ, வயலின் இசைக் கலைஞராகவும் இசை இயக்குநராகவும் திகழ்ந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us