PUBLISHED ON : டிச 24, 2018

டிசம்பர் 24, 1986 - தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள்
விற்பனையாளர்களுக்கு இடையே நல்லதொரு போட்டியை உறுதி செய்யவும், நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் சட்டம் உருவாக்கப்பட்டு இந்தியாவில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
டிசம்பர் 25, 1924 - அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாள்
இந்தியாவின் 10வது பிரதமர். 1996இல் சில நாட்களும், 1998 -- 2004இல் பிரதமராகவும் பதவி வகித்தார். சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் பட்டமும், பத்ம பூஷண் விருதும் பெற்றிருக்கிறார்.
டிசம்பர் 26, 2004 - சுனாமி நாள்
இந்தோனேசியா, இந்தியா, இலங்கை உட்பட 14 நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. உலகின் மோசமான இயற்கைச் சீரழிவுகளில் 6வது இடம்பெற்ற இதை நினைவுகூர இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
டிசம்பர் 26, 1791 - சார்லஸ் பாபேஜ் பிறந்த நாள்
கணினியின் தந்தை! இன்றைய கணினிகள் பயன்படுத்தும் இயந்திரக் கணக்கியல் அடிப்படைகளைக் கண்டுபிடித்து, 'பகுப்பாய்வுப் பொறி' (Analytical Engine) என்ற முதல் கணினியை உருவாக்கினார்.
டிசம்பர் 27, 1571 - ஜோஹன்னஸ் கெப்ளர் பிறந்த நாள்
ஜெர்மனியைச் சேர்ந்த கணிதவியலாளர், வானியலாளர். தொலைநோக்கி வேலை செய்யும் விதத்தை விளக்கினார். இவர் எழுதிப் புகழ்பெற்ற நூல் 'எபிடோமி அஸ்ட்ரோநோமியா'.
டிசம்பர் 28, 1932 - திருபாய் அம்பானி பிறந்த நாள்
'ரிலையன்ஸ்' நிறுவனத்தை உருவாக்கிய இந்திய நவீனத் தொழில்துறையின் முன்னோடி. ஆசிய வீக் இதழ் 2000ஆம் ஆண்டு பட்டியலில் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
