தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : பிப் 04, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 04, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிப்ரவரி 4, 2000 - உலகப் புற்றுநோய் நாள்

உலகில் மாறிவரும் சுற்றுப்புறம், உணவு, வாழ்க்கை முறை, மரபணு போன்ற காரணிகளாலும் புற்றுநோய் ஏற்படலாம். உலகில் புற்றுநோயை ஒழிக்க வேண்டுமென பாரீஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உலகப் புற்றுநோய் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

பிப்ரவரி 6, 1975 - ஆர்குட் புயுக்கோக்டன் பிறந்த நாள்

துருக்கி நாட்டு மென்பொறியாளர். 2009 வரை பிரபலமாக இருந்த 'ஆர்குட்' என்கிற சமூக வலைத்தளத்தின் நிறுவனர். ஆர்குட் சமூகவலைத்தளம் 2004இல் கூகுள் நிறுவனத்தால் தொடங்கி வைக்கப்பட்டு, 2014இல் மூடப்பட்டது.

பிப்ரவரி 6, 1890 - கான் அப்துல் கஃபார் கான் பிறந்த நாள்

பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தார். 'பாட்ஷா கான்' என்றும் 'எல்லைக் காந்தி' என்றும் போற்றப்பட்டார். 'அஞ்சுமான்' என்கிற அமைப்பின் மூலம் கல்வி கற்பித்தல், அன்பு போதித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டார்.

பிப்ரவரி 7, 1812 - சார்லஸ் டிக்கன்ஸ் பிறந்த நாள்

நாவல், சிறுகதைகள் எழுதிப் புகழ்பெற்ற இங்கிலாந்து நாட்டின் புதின எழுத்தாளர். தொடர்கதை பாணியைப் பிரபலப்படுத்தி வாசகர்களின் ரசனைக்கேற்ப எழுதினார். 'ஆலிவர் ட்விஸ்ட்' சார்லஸ் டிக்கன்ஸின் அற்புதப் படைப்பு!

பிப்ரவரி 7, 1877 - ஜி. எச். ஹார்டி பிறந்த நாள்

இந்தியாவின் இராமானுஜனை கணித உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து கணித வல்லுநர். எண் தேற்றம், கணிதப் பகுப்பாய்வுத் துறைகளில் சிறந்து விளங்கினார். 'ஹார்டி - இராமானுஜன் அசிம்டாடிக்' கணித சூத்திரம் மிக முக்கியமானது.

பிப்ரவரி 8, 1834 - டிமிட்ரி மெண்டிலீவ் பிறந்த நாள்

ரஷ்ய வேதியியலாளர். 'கனிம அட்டவணையின் தந்தை' என போற்றப்படுகிறார். வேதியியல் தனிமங்களை பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தாமல், அணு நிறை கொண்டு அட்டவணையை உருவாக்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us