தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : பிப் 25, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 25, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிப்ரவரி 28, 1987 - இந்திய தேசிய அறிவியல் நாள்

ராமன் விளைவை, சர்.சி.வி. இராமன் கண்டுபிடித்த நாள். இதன் நினைவாகவும், அறிவியல் மேதைகளைக் கொண்டாடவும் இந்திய அரசால் தேசிய அறிவியல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

பிப்ரவரி 29, 1896 - மொரார்ஜி தேசாய் பிறந்த நாள்

நாட்டின் 4வது பிரதமர். மொரார்ஜி, பம்பாய் மாகாண முதல்வராகவும் இருந்தார். இந்தியாவின் 'பாரத ரத்னா', பாகிஸ்தானின் 'நிஷான் இ பாகிஸ்தானி' என 2 விருதுகளையும் பெற்ற ஒரே இந்தியர்.

மார்ச் 1, 1968 - குஞ்சராணி தேவி பிறந்த நாள்

பளு தூக்குதலில் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றுத் தொடர்ச்சியாக ஏழு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார். அர்ஜுனா, பத்மஸ்ரீ, ராஜீவ் காந்தி கேல் ரத்னா ஆகிய விருதுகளை வென்றவர்.

மார்ச் 1, 1983 - மேரி கோம் பிறந்த நாள்

உலக மகளிர் குத்துச்சண்டையில் தொடர்ச்சியாக 5 முறை தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. அர்ஜுனா, பத்மஸ்ரீ, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது சுயசரிதை நூலின் பெயர் 'அன்பிரேக்கபிள்' (Unbreakable)

மார்ச் 3, 1839 - ஜாம்ஷெட்ஜி டாடா பிறந்த நாள்

நவீன தொழில்துறையின் முன்னோடி, இந்தியத் தொழில்துறையின் தந்தை. டாடா குழுமத்தின் நிறுவனர். எஃகு உற்பத்திக்குப் பெயர் பெற்ற ஜாம்ஷெட்பூர் இவர் பெயரைத் தாங்கி நிற்கிறது.

மார்ச் 3, 1847 - அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்த நாள்

அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர். 1876இல் தொலைபேசியைக் கண்டறிந்தார். காது கேளாதோர் பேச, மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ளும் முறைகளை மேம்படுத்தினார். பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us