
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏப்ரல் 29, 1848 - உலகப் புகழ்பெற்ற ஓவியங்களைப் படைத்த இந்திய ஓவியர் ரவிவர்மா பிறந்த நாள்.
ஏப்ரல் 29, 1891 - தலைசிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான 'புரட்சிக் கவிஞர்' பாரதிதாசன் பிறந்த நாள்.
மே 1, 1890 - உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் உழைப்பாளர் நாள்.
மே 3, 1935 - சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், திரைப்படம் என பல துறைகளில் சாதித்த தமிழ் எழுத்தாளர் சுஜாதா (எஸ்.ரங்கராஜன்) பிறந்த நாள்.
மே 3, 1973 - பத்திரிகையையும் அதன் சுதந்திரத்தையும் பாதுகாக்க ஐ.நா. சபை அங்கீகரித்த உலக பத்திரிகை சுதந்திர நாள்.
மே 5, 1818 - 'மூலதனம்' என்கிற நூலை எழுதிய அரசியல் பொருளாதார வல்லுநர், புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள்.

