தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஜூலை 22, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை 23, 1856 - பாலகங்காதர திலகர் பிறந்த நாள்

இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை. 'சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதனை அடைந்தே தீருவேன்' என்று கூறி சுதந்திரப் போராட்ட எண்ணத்தை மக்களிடம் விதைத்தார்.

ஜூலை 24, 1985 - பங்கஜ் அத்வானி பிறந்த நாள்

இந்திய ஸ்நூக்கர், பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரர். உலக சாம்பியன், ஆசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பத்ம பூஷண், அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற உயர்ந்த விருதுகளுக்குச் சொந்தக்காரர்!

ஜூலை 26, 1856 - ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த நாள்

உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர். இசை, இலக்கிய விமர்சகர். 60க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். இலக்கியத்துக்காக நோபல் பரிசு, திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது பெற்ற ஒரே படைப்பாளி.

ஜூலை 26, 1999 - கார்கில் போர் வெற்றி நாள்

காஷ்மீர் எல்லையான கார்கிலில் ஊடுருவிய பாகிஸ்தான் படைகளை விரட்ட இந்தியா தாக்குதல் நடத்தியது. இப்போரின் வெற்றியை நினைவுகூர, இந்தியா இந்த நாளைக் கொண்டாடி வருகிறது.

ஜூலை 27, 1876 - தேசியவிநாயகம் பிள்ளை பிறந்த நாள்

இருபதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் ஒருவர். பக்தி, வரலாறு, குழந்தை, இயற்கை, சமூகம் பற்றி எழுதி இருக்கிறார். தேசியக் கவிஞர், குழந்தைக் கவிஞர் என்று போற்றப்படுகிறார்.

ஜூலை 28, 1948 - உலக இயற்கை வளப் பாதுகாப்பு நாள்

இயற்கையை வளங்களுக்காகப் பன்னாட்டு பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டது. இயற்கையைப் பாதுகாத்தால் அது நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் அனுசரிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us