sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 03, 2026 ,பங்குனி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் சேதி

/

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : செப் 23, 2019

Google News

PUBLISHED ON : செப் 23, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செப்டம்பர் 24, 1861 - பிகாஜி காமா பிறந்த நாள்

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை. பெண்களின் சுதந்திரம், வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்தார். இந்திய விடுதலைப் போராட்டங்களை வெளிநாட்டிலிருந்து இயக்கியவர்களில் முக்கியமானவர்.

செப்டம்பர் 25, 1899 - உடுமலை நாராயணகவி பிறந்த நாள்

கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர், சீர்திருத்தவாதி என, பன்முகத் திறமைகள் கொண்டவர். தனது எழுச்சிமிக்க பாடல்களால் மக்களிடம் தேசிய உணர்வை ஊட்டினார்.

செப்டம்பர் 27, 1980 - உலக சுற்றுலா நாள்

பொருளாதாரம், கலாசாரம், ஒற்றுமை உணர்வை மக்கள் மனத்தில் ஏற்படுத்த, ஐ.நா.வின் கீழ் இயங்கும் உலக சுற்றுலா அமைப்பு செயற்பட்டு வருகிறது. இந்த நாள் உலக சுற்றுலா நிறுவனத்தின் (WTO) ஆதரவில் கொண்டாடப்படுகிறது.

செப்டம்பர் 28, 1982 - அபினவ் பிந்த்ரா பிறந்த நாள்

துப்பாக்கி சுடும் வீரர். 2002ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியிலும், 2008இல் பீஜிங் ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர்.

செப்டம்பர் 28, 1907 - பகத்சிங் பிறந்த நாள்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர், புரட்சியாளர். நாட்டிற்காகப் போராடி மடிந்ததால், 'மாவீரன் பகத்சிங்' என அழைக்கப்பட்டார். விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனத்தில் விதைக்கக் காரணமாக இருந்தார்.

செப்டம்பர் 29, 2000 - உலக இதய நாள்

இந்த நாளின் முக்கிய நோக்கம் மாரடைப்பு வரும் முன் காப்பதும், வந்தபின் குணம் அடையச் செய்வதும்தான். உலக இதய அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, யுனெஸ்கோ போன்றவை இந்த நாளைக் கொண்டாடுகின்றன.






      Dinamalar
      Follow us