தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெற்றி வீராங்கனை!

வெற்றி வீராங்கனை!

வெற்றி வீராங்கனை!


PUBLISHED ON : செப் 23, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 23, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வினேஷ் போகத் (Vinesh Phogat)

விளையாட்டு : மல்யுத்தம்

பிறந்த நாள் : 25 ஆகஸ்ட் 1994

ஊர் : பலாலி, ஹரியாணா


ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இன்று இந்திய மல்யுத்தப் போட்டியின் வெற்றி முகங்களாக மாறியிருக்கிறார்கள்.

அவர்கள் யார், அவர்களது பயிற்சியாளர் யார் என்பதை 'டங்கல்' எனும் இந்தித் திரைப்படம் வெளியாகி உலகத்திற்கே அடையாளம் காட்டியது. பபிதா குமாரி, கீதா போகத், ரிது போகத், பிரியங்கா போகத் சகோதரிகளில் ஒருவர்தான் வினேஷ் போகத்.

மஹாவீர் சிங்கின் தம்பி மகள்தான் வினேஷ். தம்பி இறந்த பிறகு அவரது இரண்டு மகள்களையும், தன் மகள்களோடு சேர்த்தே வளர்த்தார். மல்யுத்தப் பயிற்சியும் கொடுத்தார்.

சிறுவயதில் இருந்தே மல்யுத்தப் போட்டிகளில் கலந்து கொண்டு பபிதா மற்றும் கீதா போகத் போலவே, வினேஷ் போகத்தும் வெற்றிபெற்று வந்தார்.

2013ஆம் ஆண்டு, ஆசிய மல்யுத்தப் போட்டியில் வெண்கலமும், காமன்வெல்த்தில் வெள்ளியும் வென்று அசத்தினார்.

51 கிலோ பிரிவில் தங்கம் வெல்ல முடியாததால், தீவிர பயிற்சி மூலம் தன் எடையைக் குறைத்தார். அதன் மூலம், 2014இல், கிளாஸ்கோ காமன்வெல்த் 48 கிலோ பிரிவில் போட்டியிட்டு, தங்கம் வென்று பெருமை சேர்த்தார். 2018இல் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்தார்.

2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் காலிறுதிப் போட்டியின்போது, முழங்காலில் அடிபட்டதால் கண்ணீருடன் வெளியேறினார். “2020ஆம் ஆண்டு நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என் லட்சியம்” என்று அன்றே நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இதன் முதற்படியாக, கஜகஸ்தானில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 'ப்ரீஸ்டைல்' 53 கிலோ பிரிவில் வென்றார். இதனால், டோக்கியோ ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை ஆனார்.

இதற்கான முதல் சுற்றில் தோல்வியைச் சந்தித்து இருந்தாலும், ரெபிசேஜ் மூலம் வாய்ப்புக் கிடைத்தது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியாவை வீழ்த்தி, உலக சாம்பியன்ஷிப்பில் முதல் பதக்கம் வென்று சாதித்தார்.

2020ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுப் பட்டியலில், வினேஷ் போகத்தின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us