sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : அக் 21, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்டோபர் 21, 1992 - உலக அயோடின் பற்றாக்குறை நாள்

அயோடின் சத்து மனித உடல் வளர்ச்சிக்குத் தேவை. அயோடின் குறைபாடு உலகம் முழுவதும் உள்ளது. அதன் பற்றாக்குறை குறித்தும், விளைவுகள் பற்றியும் எடுத்துரைப்பது இந்த நாளின் நோக்கம்.

அக்டோபர் 21, 1833 - ஆல்ஃபிரட் நோபல் பிறந்த நாள்

அறிவியலாளர், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தார். உலகின் மிக உயரிய பரிசாகக் கருதப்படும் நோபலை உருவாக்கினார். இவர் நினைவாக ஒரு தனிமத்துக்கு 'நோபலியம்' என பெயரிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 24, 1948 - ஐக்கிய நாடுகள் சபை நாள்

உலகின் மிக உயர்ந்த அமைப்பு. எதைப் பற்றியும் விவாதம் செய்யவும், சமாதானம், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவும் உரிமைகளைக் கொண்டுள்ளது. இதன் சாதனைகளை எடுத்துக்கூறுவது இந்த நாளின் நோக்கம்.

அக்டோபர் 24, 1921 - ஆர்.கே.லஷ்மண் பிறந்த நாள்

'திருவாளர் பொதுஜனம்' (The Comman Man)R என்கிற கேலிச் சித்திரக் கதாபாத்திரத்தை வரைந்து புகழ்பெற்ற இந்திய ஓவியர். பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் இளைய சகோதரர். பத்மவிபூஷண், உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

அக்டோபர் 25, 1881 - பாப்லோ பிகாசோ பிறந்த நாள்

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர் என, பன்முகத் திறமை கொண்டவர். அமைதிச் சின்னமாக புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப்படுத்தினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைப் படைப்புகளை உருவாக்கி இருக்கிறார்!

அக்டோபர் 27, 1920 - கே.ஆர்.நாராயணன் பிறந்த நாள்

கல்லூரி விரிவுரையாளர். லண்டனில் பத்திரிகையாளராக இருந்தபோது, பிரதமர் நேருவின் கோரிக்கையை ஏற்று, இந்திய வெளியுறவுத்துறை பணியில் சேர்ந்தார். துணை ஜனாதிபதியாக இருந்து, இந்தியாவின் 10வது ஜனாதிபதி (1997 - 2002) ஆனார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us