தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி!

தேதி சொல்லும் சேதி!

தேதி சொல்லும் சேதி!


PUBLISHED ON : நவ 25, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவம்பர் 26, 2001 - உலக உடல் பருமன் எதிர்ப்பு நாள்

அதிக அளவு கொழுப்பு நமது திசுக்களில் சேர்வதே உடல் பருமன். இது உடல் நலத்துக்கு ஆபத்தானது. உடல் பருமனால் ஏற்படும் தீமைகளை விளக்க, இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

நவம்பர் 26, 2015 - அரசியல் சாசன தினம்

இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக இருந்த, அம்பேத்கரை கௌரவிக்கவும், அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் பிரதமர் மோடியால் இந்த தினம் தொடங்கப்பட்டு அனுசரிக்கப்படுகிறது.

நவம்பர் 27, 1986 - சுரேஷ் ரெய்னா பிறந்த நாள்

இந்திய கிரிக்கெட் வீரர். 2010, இலங்கைக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே சதம் அடித்தார். “உலகின் தலைசிறந்த ஃபீல்டர்களில் மிக முக்கியமானவர்!” என, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் இவரைப் பாராட்டியிருக்கிறார்.

நவம்பர் 28, 1820 - ஃபிரெடரிக் ஏங்கல்ஸ் பிறந்த நாள்

ஜெர்மன் அரசியல் தத்துவஞானி, பத்திரிகையாளர். மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச கொள்கைகளை உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையையும் எழுதினார். முதலாளித்துவ பொருளாதாரம் பற்றி கருத்துகள் கூறியிருக்கிறார்.

நவம்பர் 30, 1858 - ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள்

மார்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பைக் கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி. 'தாவரங்களுக்கும் உயிர் உண்டு' என்று சொன்ன அறிவியல் ஆராய்ச்சியாளர். பிரிட்டிஷ் அரசாங்கம் 'சர்' பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

நவம்பர் 30, 1874 - வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த நாள்

முன்னாள் பிரதமர். இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தின் பெருமையை உலகறியச் செய்தார். புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் இவர், இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us