PUBLISHED ON : நவ 25, 2019

இந்திய வரலாற்றில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி வங்கதேச அணியுடன் கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த வெள்ளியன்று தொடங்கியது. போட்டி நேரம் பகல் 1 மணி முதல் இரவு 8 மணி என அறிவிக்கப்பட்டது.
இந்த டெஸ்ட் போட்டிக்காக முதலில் மஞ்சள், மின்னும் ஆரஞ்ச் நிற பந்துகள் பயன்படுத்தி சோதனை செய்யப்பட்டன. 'டிவி' கேமராக்கள் பந்தைப் படம் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இவ்வாறு 16 நிறப் பந்துகள் மாறி மாறி சோதிக்கப்பட்டு, இறுதியாக 'பிங்க்' நிறப் பந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. சிவப்பு நிறப் பந்துகளைவிடத் தெளிவாகத் தெரிவதால் பகலிரவுப் போட்டியில் முக்கிய மாற்றமாக பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. வழக்கமான சிவப்பு பந்து தோலினால் ஆனது, அதனால் சிவப்பு நிறம் இயற்கையாகவே கிடைக்கிறது. ஆனால் பிங்க் பந்துகளுக்கு செயற்கை நிறம் பூசப்படுகிறது. மேலும், ஈடன் கார்டன் மைதானத்தில் அடர்ந்த புற்கள் அதிகம் என்பதாலும், களிமண் களம் என்பதாலும் பிங்க் பந்தின் பளபளப்பு கூடுதலாகத் தாக்குப் பிடிக்கும்.
