தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : டிச 23, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 23, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிசம்பர் 24, 1986 - தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள்

விற்பனையாளர்களுக்கு இடையே நல்லதொரு போட்டியை உறுதி செய்யவும், நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் சட்டம் உருவாக்கப்பட்டது. நுகர்வோர் விழிப்புணர்வை வலியுறுத்தி இந்தியாவில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

டிசம்பர் 25, 1924 - அடல் பிஹாரி வாஜ்பேயி பிறந்த நாள்

இந்தியாவின் 10வது பிரதமர். 1996இல் சில நாட்கள், 1998 முதல் 2004 வரை பிரதமராகப் பதவி வகித்தார். இலக்கியவாதி, பத்திரிகையாளர் என பன்முகத் திறமை கொண்டவர். பத்மபூஷண் விருது பெற்றுள்ளார்.

டிசம்பர் 26, 2004 - சுனாமி நாள்

இந்தோனேசியா, இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 14 நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது ஆழிப் பேரலை. உலகின் மோசமான இயற்கைச் சீரழிவுகளில் 6வது இடம்பெற்ற இந்தப் பேரழிவின் சோகங்களை நினைவுகூர இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

டிசம்பர் 26, 1791 - சார்லஸ் பாபேஜ் பிறந்த நாள்

கணினியின் தந்தை! இன்றைய கணினிகள் பயன்படுத்தும் இயந்திரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தார். கணிதத்தையும் இயந்திரத்தையும் இணைத்து, 'பகுப்பாய்வுப் பொறி' (Analytical Engine) என்ற முதல் கணினியை உருவாக்கினார்.

டிசம்பர் 27, 1571 - ஜோஹன்னஸ் கெப்ளர் பிறந்த நாள்

ஜெர்மனியைச் சேர்ந்த கணிதவியலாளர், வானியலாளர். கோள் இயக்கம் தொடர்பாகப் பல ஆராய்ச்சிகளையும் தொலைநோக்கி வேலை செய்யும் விதத்தையும் விளக்கினார். 'எபிடோமி அஸ்ட்ரோநோமியா' என்ற புகழ்பெற்ற நூலை எழுதியிருக்கிறார்.

டிசம்பர் 27, 1822 - லூயி பாஸ்டர் பிறந்த நாள்

நுண்ணுயிரியலின் தந்தை. உணவுப் பொருள் பதப்படுத்தும் முறை அவரது பெயரால் 'பாஸ்ச்சரைசேஷன்' என்று அழைக்கப்படுகிறது. வெறிநாய் கடியால் உண்டாகும் ரேபீஸ் நோய்க்கு தடுப்பு மருந்தைக் கண்டறிந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us