PUBLISHED ON : ஜன 06, 2020

ஜனவரி 6, 1883 - கலீல் ஜிப்ரான் பிறந்த நாள்
சிந்தனையாளர், எழுத்தாளர், ஓவியர், தத்துவவாதி, கவிஞர் என, பன்முகத் திறன் கொண்டவர். இவரது படைப்புகள் ஒவ்வொரு தனிமனித எண்ணங்களையும் பிரதிபலித்தன. உலகின் பல இடங்களில் இவரது ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன.
ஜனவரி 6, 1959 - கபில்தேவ் பிறந்த நாள்
இந்திய கிரிக்கெட் வீரர். 1983இல் இந்தியா உலகக் கோப்பை வென்றபோது, அணியின் தலைவராக இருந்தார். 'ஹரியாணா புயல்' என்று அழைக்கப்படும் இவருக்கு, லண்டன் அரசு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்தது.
ஜனவரி 8, 1942 - ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்த நாள்
இயற்பியல் விஞ்ஞானி, கணித நிபுணர். பெருவெடிப்பு (Big Bang) கொள்கைக்கான நிரூபணத்தை அளித்தார். இளவயதிலேயே நரம்பியக்க நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், கணினி பேச்சுத் தொகுப்பி மூலம் கருத்துகளைக் கூறினார்.
ஜனவரி 9, 1922 - ஹர் கோவிந்த் குரானா பிறந்த நாள்
முதன்முறையாக செயற்கை முறையில் மரபணுக்களை ஆய்வுக்கூடத்தில் உற்பத்திசெய்து, அறிவியல் உலகிற்கு புது வழி காட்டினார். இந்திய - அமெரிக்க மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான இவர், 1968இல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
ஜனவரி 11, 1859 - கர்சன் பிரபு பிறந்த நாள்
இந்தியாவில் ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களில் குறிப்பிடத்தக்கவர். ஆட்சியமைப்பு, இந்தியக் கல்விமுறையில் பல சீர்த்திருத்தங்கள் செய்தார். காவல்துறைக்கும் இராணுவத்துக்கும் பயிற்சிப் பள்ளிகள் ஏற்படுத்தினார்.
ஜனவரி 12, 1863 - விவேகானந்தர் பிறந்த நாள்
இந்தியப் பண்பாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டினார். 1893இல் சிகாகோ நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய இவரது சொற்பொழிவு, உலகப்புகழ் பெற்றது. இந்த நாள் இந்திய தேசிய இளைஞர் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
