sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் சேதி

/

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : பிப் 10, 2020

Google News

PUBLISHED ON : பிப் 10, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்ரவரி 11, 1847 - தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த நாள்

அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாகக் கற்காமல், 1,300 விஷயங்களைக் கண்டறிந்து, 1,093 கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்றார்.

பிப்ரவரி 12, 1809 - சார்லஸ் டார்வின் பிறந்த நாள்

ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டைச் சொன்னார். 1859இல் உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை வெளியிட்டு, உயிரினங்கள் தொடர்பான சிந்தனைகளை புதிய கோணத்தில் மாற்றியமைத்தார்.

பிப்ரவரி 12, 1809 - ஆபிரகாம் லிங்கன் பிறந்த நாள்

1860இல் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைத்தனத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து, இனவெறிக் கொடுமையை ஒழித்தார். அடிமைகளை நிரந்தரமாக விடுவிப்பதற்கான விடுதலைப் பிரகடனத்தை 1863இல் வெளியிட்டார்.

பிப்ரவரி 13, 1879 - சரோஜினி நாயுடு பிறந்த நாள்

சுதந்திரப் போராட்ட வீராங்கனை, 'கவிக்குயில்' என்று புகழப்பட்ட கவிஞர். 'இந்தியப் பெண்கள் சமையலறையை விட்டு வெளியே வந்து உரிமைக்காகப் போராட வேண்டும்' என்றார். 'முதல் பெண் ஆளுநர்' என்ற பெருமைக்குரியவர்.

பிப்ரவரி 15, 1564 - கலிலியோ கலீலி பிறந்த நாள்

நவீன வானியல் ஆய்வுகளின் தந்தை. தனது தொலைநோக்கி மூலம் வியாழன் கிரகத்துக்கு 4 நிலாக்கள், சனிக்கிரகத்துக்கு வளையம், சூரியனில் கரும்புள்ளிகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். 'பூமி உள்ளிட்ட கோள்கள் சூரியனைச் சுற்றுகின்றன' என்ற நிகோலஸ் கூற்றை ஆய்வுகள் மூலம் விளக்கினார்.

பிப்ரவரி 16, 1834 - எர்ன்ஸ்ட் ஹேக்கல் பிறந்த நாள்

'மனித குலம் தோன்றியது இந்திய துணைக் கண்டத்தில்தான்' என்பது இவரது கணிப்பு. பல நாடுகளுக்குப் பயணம் செய்து, புதிய உயிரினங்களைக் கண்டறிந்து பெயர் சூட்டினார். உயிரியல் தொடர்பான பல சொற்களை அறிமுகம் செய்தார்.






      Dinamalar
      Follow us