PUBLISHED ON : பிப் 10, 2020

1. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில், 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது / குறைந்துள்ளது?
அ) 40 சதவீதம் குறைந்துள்ளது
ஆ) 80 சதவீதம் குறைந்துள்ளது
இ) 40 சதவீதம் அதிகரித்துள்ளது
ஈ) 100 சதவீதம் அதிகரித்துள்ளது
2. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில், 50 ஆயிரம் கோடி ரூபாயில் பெட்ரோலிய ஆலை அமைப்பது தொடர்பாக ஆலோசனை தொடங்கியுள்ளது?
அ) திருவாரூர்
ஆ) தூத்துக்குடி
இ) கடலூர்
ஈ) இராமநாதபுரம்
3. குரூப் 4, குரூப் 2 தேர்வுகளில் முறைகேட்டைத் தடுக்கும் விதமாக, எது கட்டாயமாக்கப்பட்டுள்ளது?
அ) ஆதாரை இணைப்பது
ஆ) தேர்வை வீடியோ பதிவு செய்வது
இ) ஆன்லைன் தேர்வு
ஈ) இவை அனைத்தும்
4. இந்தியாவில் சிறுத்தைகள் எண்ணிக்கை எத்தனை சதவீதமாக குறைந்து விட்டதாக தெரியவந்துள்ளது?
அ) 10 முதல் 20 சதவீதம்
ஆ) 55 முதல் 75 சதவீதம்
இ) 20 முதல் 30 சதவீதம்
ஈ) 75 முதல் 90 சதவீதம்
5. சீனா, மியான்மர், தென்கிழக்காசிய நாடுகளில் இருந்து உணவுப்பொருள்கள் இறக்குமதிக்குத் தடை விதித்துள்ள மாநிலம்?
அ) மணிப்பூர்
ஆ) அசாம்
இ) மேகாலயா
ஈ) கோவா
6. நாட்டிலேயே முதல் முறையாக, இறந்தவர்களின் ஆதார் எண்களை சேமிக்கும் பணி எந்த நகரில் தொடங்கப்பட்டுள்ளது?
அ) விருத்தாசலம்
ஆ) விருதுநகர்
இ) கோவை
ஈ) ஈரோடு
7. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதை முதன்முதலில் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்த மருத்துவர் உயிரிழந்தார். இவர் பெயர் என்ன?
அ) புரூஸ் லீ
ஆ) சென் லீ
இ) சைங் மக்கே
ஈ) லீ வென் லியாங்
8. தாய்மார்களை போலவே தந்தையருக்கும் 7 மாதகாலம் மகப்பேறு விடுமுறை வழங்க எந்த நாடு முடிவு முடிவெடுத்துள்ளது?
அ) ஐக்கிய அரபு அமீரகம்
ஆ) சுவிட்சர்லாந்து
இ) பின்லாந்து
ஈ) ஆஸ்திரேலியா
9. கடந்த வாரம், புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறி, 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள பௌடர் நிறுவனம் எது?
அ) பான்ட்ஸ்
ஆ) யார்ட்லி லண்டன்
இ) ஜான்சன் அண்ட் ஜான்சன்
ஈ) என்சான்ட்டர்
10. வருமானம் குறைந்ததால், குப்பைக்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ள மாநகராட்சி எது?
அ) சென்னை
ஆ) மும்பை
இ) பெங்களூரு
ஈ) கொச்சி
விடைகள்:
1)ஈ 2)இ 3)அ 4)ஈ 5)அ 6)ஆ 7)ஈ 8)இ 9)இ 10)ஆ

