தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : பிப் 17, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 17, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிப்ரவரி 18, 1745 - அலெசாண்ட்ரோ வோல்ட்டா பிறந்த நாள்

மின்துறை என்று ஒரு துறை உண்டாகக் காரணமாக இருந்த இயற்பியலாளர். இவரைப் பெருமைப்படுத்த மின் அழுத்த அலகு 'வோல்ட்', மின் அழுத்தத்தை அளக்கும் கருவி வோல்ட்மீட்டர் (Voltmeter) என குறிக்கப்படுகிறது.

பிப்ரவரி 19, 1473 - நிகோலஸ் கோபர்நிகஸ் பிறந்த நாள்

உலகப் புகழ்பெற்ற வானியலாளர். தொலைநோக்கிக் கருவி இல்லாமலேயே ஆராய்ச்சிகள் செய்தார். புவி மையக் கோட்பாட்டை மறுத்து, சூரிய மையக் கோட்பாட்டை வகுத்தார். கணித அடிப்படையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

பிப்ரவரி 19, 1855 - உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த நாள்

'தமிழ்த் தாத்தா' என்று கொண்டாடப்படும் தமிழறிஞர். 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டு, 3,000க்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும் கையெழுத்துப் பிரதிகளையும் அரும்பாடுபட்டுச் சேகரித்துப் பதிப்பிக்கும் பணியைச் செய்தார்.

பிப்ரவரி 21, 1894 - சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பிறந்த நாள்

பிரபல இயற்பியலாளர். இந்திய அறிவியல் தொழிலக ஆய்வகங்களின் தந்தை. பெட்ரோலியக் கழிவுகளைப் பயன்படு பொருளாக மாற்றுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்தார். இந்திய அரசு இவருக்கு 'பத்ம பூஷண்' விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us