sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

கடந்த வாரம் - நான்கில் ஒன்று சொல்!

/

கடந்த வாரம் - நான்கில் ஒன்று சொல்!

கடந்த வாரம் - நான்கில் ஒன்று சொல்!

கடந்த வாரம் - நான்கில் ஒன்று சொல்!


PUBLISHED ON : பிப் 17, 2020

Google News

PUBLISHED ON : பிப் 17, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒவ்வொரு வாரமும் ஏராளமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றையெல்லாம் பார்த்து வருவீர்கள். இதற்கெல்லாம் சரியான விடை சொல்லுங்கள் பார்க்கலாம். தெரியாதவர்கள், உடனே கீழே திருப்பிப் பார்க்க வேண்டாம். கொஞ்சம் யோசித்து, நாளிதழ்களைப் புரட்டி, சரியான விடையை முயற்சி செய்து கண்டுபிடியுங்கள்.

1. ஆள் நடமாட்டம் இல்லாத லண்டன் சுரங்க நடைபாதையில், இரண்டு விலங்குகள் சண்டையிட்டுக் கொள்ளும் புகைப்படம் ஒன்று, 2019ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படமாக அறிவிக்கப்பட்டது. அங்கு, எந்த விலங்குகள் சண்டையிட்டன?

அ) நாய்கள்

ஆ) பூனைகள்

இ) எலிகள்

ஈ) மான்கள்

2. பிலிப்பைன்ஸ் நாட்டில், கடந்த 20 ஆண்டுகளாக இராணுவ ரீதியாக பாதுகாப்பு வழங்கி வந்த நாட்டுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அந்நாடு அறிவித்தது? எந்த நாட்டுடன் ஒப்பந்தம் முறிக்கப்பட்டது?

அ) சீனா

ஆ) இங்கிலாந்து

இ) ஜப்பான்

ஈ) அமெரிக்கா

3. 2022இல் நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் செல்லும் இந்தியர்கள் 4 பேர், பயிற்சிக்காக எந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.?

அ) சுவிட்சர்லாந்து

ஆ) ஆஸ்திரியா

இ) ரஷ்யா

ஈ) அஜர்பைஜான்

4. 2017வது ஆண்டிலேயே, மக்களுக்கு எதிராக சண்டையிடும், முகமூடி அணிந்த கொரோனா என்ற வில்லன் கதாபாத்திரம், எந்த பிரெஞ்சு காமிக்சில் வெளிவந்தது?

அ) ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் சேரியட் ரேஸ்

ஆ) காஸ்டன் லா காஃபே

இ) லெஸ் அவென்சூர்ஸ் டெ டின்டின்

ஈ) லக்கி லூக்

5. யானைகளின் தொல்லை தாங்க முடியாமல், 60 யானைகளை வேட்டையாடும் அனுமதி எந்த ஆப்பிரிக்க நாட்டு அரசால் வழங்கப்பட்டுள்ளது?

அ) கென்யா

ஆ) போட்ஸ்வானா

இ) ஜிம்பாப்வே

ஈ) நமீபியா

6. இங்கிலாந்து நாட்டின் புதிய நிதியமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனுமான இவர் நியமிக்கப்பட்டுள்ளார்?

அ) ரிஷி சுனாக்

ஆ) கோட்டீஸ்வரன்

இ) பாபு கிருஷ்ணமூர்த்தி

ஈ) நந்தகோபால்

7. சமீபத்தில், இந்தியாவில் ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைத்து, இந்த புகழுக்குரிய இடத்தை எட்டாவது அதிசயமாக அறிவிக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. அது எந்த இடம்?

அ) சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை

ஆ) தஞ்சை பெரிய கோவில்

இ) மதுரை மீனாட்சியம்மன் கோவில்

ஈ) மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்

8. மேற்கு வங்க போலீசார், மோப்ப சக்தியில் சிறந்த இந்த வகை நாய்களை அண்மையில் இணைத்துள்ளனர். இந்த இனத்தைச் சேர்ந்த நாய்கள் தான், அல்கொய்தா தலைவன் பின்லேடனைக் கண்டுபிடிக்க உதவின. அது எந்த இன நாய்?

அ) பெல்ஜியன் மேலினாய்ஸ்

ஆ) ஜெர்மன் ஷெப்பர்ட்

இ) டாபர்மேன்

ஈ) ராட்வைலர்

9. தங்கள் மதநம்பிக்கைக்கு ஏற்ப டர்பன் அணியலாம், தாடி வளர்க்கலாம் என்று விமானப்படை உடையை எந்த நாட்டு இராணுவம் சில தினங்களுக்கு முன் புதுப்பித்துள்ளது?

அ) கனடா

ஆ) இங்கிலாந்து

இ) சுவிட்சர்லாந்து

ஈ) அமெரிக்கா

10. ஜூலை 24 அன்று தொடங்கவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா வைரஸ் காரணமாக, _____________ ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது?

அ) இடமாற்றம் செய்யப்படுவதாக

ஆ) ரத்து செய்யப்படுவதாக

இ) தேதி மாற்றம் செய்யப்படுவதாக

ஈ) எந்த மாற்றமுமின்றி உறுதி செய்யப்படுவதாக

விடைகள்

1)இ 2)ஈ 3)இ 4)அ 5) ஆ 6)அ 7)ஆ 8)அ 9)ஈ 10)ஈ






      Dinamalar
      Follow us