sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

சமாளிச்சுக்கிறோம் அவ்வளவுதான்!

/

சமாளிச்சுக்கிறோம் அவ்வளவுதான்!

சமாளிச்சுக்கிறோம் அவ்வளவுதான்!

சமாளிச்சுக்கிறோம் அவ்வளவுதான்!


PUBLISHED ON : பிப் 17, 2020

Google News

PUBLISHED ON : பிப் 17, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமக்கு இலகுவான பல விஷயங்கள் சிலருக்கு சிரமமாக இருக்கும். அவர்கள் நமது உலகில் ஒன்றிட முடியாமல் சிரமப்படுவார்கள். அவர்களில் இடதுகை பழக்கமுடையவர்களும் உள்ளனர். அவர்களின் கஷ்டங்களையும் நாம் உணரவேண்டும் என்பதற்காகவே, நீங்கள் இடதுகை பழக்கமுடையவரா (left handers), நீங்கள் சந்திக்கும் சங்கடங்கள் என்ன? என்று கேட்டிருந்தோம். திருவள்ளூர் ஸ்ரீ ஆர்.எம்.ஜெயின் வித்யாஷ்ரம் பள்ளியில் இடதுகை பயன்படுத்தும் மாணவர்களைச் சந்தித்தோம்.

கோ.ஹரிப்பிரியா, 9ஆம் வகுப்பு

ஈசியாகவும் வேகமாகவும் இடதுகையால செய்யற வேலைகளை, என்னால் அதே வேகத்துடன் வலது கையால செய்ய முடியுறதில்லை. உதாரணமா, இடது கையால் நான் கோலம் போட்டுக்கொண்டிருக்கும்போது, யாராவது வந்தால் எழுந்து நின்றுவிடுவேன். ஏன்னா, வலதுகையிலதான் போடணும்னு சொல்லி இருக்காங்க. அதனால அடுத்தவங்க அங்கே இருக்கும்வரை மெதுவாக சமாளிச்சுட்டே இருப்பேன். இப்படி நிறைய இருக்கு.

அ.ஹிரண்மயி, 11ஆம் வகுப்பு

பள்ளியில் தேர்வு நேரத்தில் பெஞ்சில் உட்காரும்போது இடதுபக்கம் உட்காரும் வலது கைக்காரர்களுடன் இடித்துக்கொண்டு உட்காருவதுபோல அமையும். அவர்களிடம் தள்ளி உட்காரும்படி ஒரு முறை கேட்கலாம். ஒவ்வொரு முறையும் கேட்பதற்கு சங்கடமாக இருக்கும். அதனாலேயே தேர்வு நேரங்களில் உட்காரும்போது, இடதுபக்கச் சுவர் ஓரம் இடம் கிடைக்கும்படி வேண்டிக்கொள்வேன்.

ச.கிருத்திகா, 8ஆம் வகுப்பு.

உங்களிடம் யாராவது எதையாவது நீட்டினால் நீங்கள் வலது கையால் எடுப்பீங்க தானே? அதுபோலத்தான் நாங்களும். உறவினர்களோ, அல்லது வேறு யாராவதோ ஏதாவது கொடுத்தால், அதை வாங்க இடது கைதான் முன்னால் நீளும். ஆனா வீட்டில் செம திட்டு விழும். இதை ஒழுக்கக்கேடான விஷயமாக மற்றவர்கள் பார்ப்பாங்களோன்னு பயப்படுவாங்க. அந்தமாதிரி நேரத்தில் ரொம்ப வருத்தமாக இருக்கும்.

பா.சாதனா, 8ஆம் வகுப்பு

சாப்பிடும்போது இடதுகையால் தான் சாப்பிடுவேன். இதைப் பலரும் கிண்டல் செய்வாங்க. அது எனக்கு வருத்தத்தைத் தரும். அதுமாதிரி, ரைட்டிங் பேட் இருக்கும் சேர்களில் உட்கார்ந்து எழுதவே முடியாது. அவை எல்லாம் வலது கைக்காரர்களுக்காகவே இருக்கிறது. மேலை நாடுகளில் இவை எல்லாம் இடக்கை மனிதர்களுக்கும் ஏற்றமாதிரி கிடைக்கும்.

ரா.அனிருத், 8ஆம் வகுப்பு.

தேர்வு நேரங்களில் ஜெல் பேனா கொண்டு எழுதினால் கையில் பேனாவின் மை ஒட்டி, கையெழுத்து அசிங்கமாகிவிடும். அதோடு, எழுத்துகள் கையில்பட்டு தாள் முழுவதும் அப்படியே பரவிவிடும். இதனால் எப்பவுமே மிகவும் கவனமாக எழுதவேண்டியதிருக்கும். இல்லாவிட்டால், எழுதியதை நாமே அடித்துவிட்டதுபோலத் தோன்றும். அதனால் மதிப்பெண் கிடைக்காமல் போகும் வாய்ப்பும் இருக்கு.

மீனாட்சி, 9ஆம் வகுப்பு

சின்ன வயசுல பாட்டுகிளாஸ் போனேன். அங்கே வலது கையில் தாளம் போடச்சொன்னாங்க. என்னால முடியலை. இசை என்பது கடவுள் சார்ந்த விஷயம். அதனால வலதுகையிலதான் தாளம் போடணும்னு சொல்லிட்டாங்க. நானும் பயிற்சி எடுத்துப் பழகிக்கொண்டேன். எல்லாவற்றையும் இப்படி ஏதோ சமாளிச்சுக்கிறேன். அவ்வளவுதான்!






      Dinamalar
      Follow us