sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/ஏழாவது உலகக் கோப்பை டி20!

ஏழாவது உலகக் கோப்பை டி20!

ஏழாவது உலகக் கோப்பை டி20!


PUBLISHED ON : அக் 21, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண்களுக்கான ஏழாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட தரவரிசையில் முதல் 10 இடங்கள் வகிக்கும் அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள 6 அணிகள் தகுதிச்சுற்று மூலம் தேர்வாகும்.

தகுதிச் சுற்றுப் போட்டிகள் துபாய் மற்றும் அபுதாபியில் அக்டோபர் 18இல் தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடக்கிறது. தகுதிச் சுற்றில் கலந்துகொள்ளும் 14 அணிகள் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, நமீபியா, சிங்கப்பூர், கென்யா, பெர்முடா ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து, ஓமன், ஹாங்காங், கனடா, ஜெர்சி, நைஜீரியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். லீக் மற்றும் பிளேஆப் சுற்றின் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us