தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்

மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்

மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்


PUBLISHED ON : ஜூன் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கர்: முன்னா... ஸ்கூல் ஆரம்பிச்ச உடனே முகத்துல சந்தோஷத்தக் காணோமே. லீவுல பளிச்சுன்னு இருந்துச்சு உன் முகம்.

முன்னா: ஆமா, கிளாஸ்ரூம், நோட் புக்ஸ், ஹோம்வொர்க், எக்ஸாம் இதெல்லாம் நெனச்சுப் பார்த்தா சிரிப்பு எங்க இருந்து வரும்?

ச: ஹஹ்ஹா... உன்ன மாதிரி பசங்க அழக்கூடாதுன்னுதான் ஸ்கூலுக்கு முதல்நாள் வரும்போது சாக்லேட் தர்றாங்க. இன்னும் சில ஸ்கூல்ல 1000 ரூபாய் பரிசுகூட தர்றாங்கனா பாத்துக்கோ!

மு: என்னமோ போடா. ஒருநாள் மட்டும் இனிப்பு கொடுத்துட்டு, போகப்போக அடி பின்னிடுவாங்க.

ச: இப்போதான் யாரும் அடிக்கிறது இல்லயே. எல்லாருக்கும் கல்வி கிடைக்கணும். அதனாலதான் ஏதாச்சும் பண்ணி நம்மளை ஸ்கூலுக்கு வரவழைக்குறாங்க.

மு: நீ சொல்றதும் சரிதான். சீருடை, புத்தகங்கள்ன்னு எல்லாமே நமக்கு இலவசமாக் கொடுக்குறாங்க. இருந்தாலும் ஸ்கூல்னாலே பயமாதான் இருக்குது.

ச: அந்தக் காலத்துக் குருகுலக் கல்விதான் உனக்கு சரிப்பட்டு வரும். வீட்டவிட்டு தூரமா அனுப்பி, குருவுக்குப் பணிவிடைகள் செய்து படிச்சாதான் இந்த பயம் போகும்.

மு: என்னது! வீட்ட விட்டுப் போகணுமா? பணிவிடைகள் செய்யணுமா? யாரு... நானா...? ஆமா, குருகுலம்னா என்ன?

ச: ஏன்டா நான் சொன்னதே திருப்பிச் சொல்ற. குருகுலம்னா, பண்டைக் காலத்து மாணவர்கள் அவர்கள் விரும்பும் கலையைப் பயில, ஆசிரமத்தில் தங்கணும், பணிவிடைகள் செய்யணும். இப்படியே 12 வருஷங்கள் கடினமான பயிற்சி எடுக்கணும்.

மு: அய்யோ! இதெல்லாம் நமக்கு செட் ஆகாது. மார்னிங் போனா ஈவ்னிங் வீட்டுக்குத் திரும்பி வந்துரணும். அப்படி ஏதாச்சும் குருகுலம் இருக்கா?

ச: உனக்கு ஊர் சுத்தணும் அவ்வளவுதான. குருகுலத்தில கல்வி கத்துக்கிற மாணவர்கள் அவங்களோட குடும்பத்தை விட்டுப் பிரிந்துதான் இருக்கணும்.

மு: அந்தக் காலத்துப் பசங்க நம்மளவிட ரொம்பப் பாவம்தான்.

ச: பாவமா? 'அங்க படிச்சுட்டு வந்த மாணவர்கள் நல்ல ஒழுக்கத்துடனும் நாட்டிற்கு நல்ல குடிமகனாகவும் வீட்டிற்குப் பயனுள்ளவனாகவும் இருந்தாங்க' அப்படின்னு வரலாறு நமக்குச் சொல்லுது.

மு: ஆமா... ஆமா... வரலாறு நமக்கு ரொம்ப முக்கியம்தான். அதுக்காக குருகுலம் போய்ப் படிக்க வேணாம். ஸ்கூலுக்கே போகலாம்.

ச: அந்த பயம் இருக்கணும். ஹி.. ஹி...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us