தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பெரிய்ய்ய்ய சிலைகள்

பெரிய்ய்ய்ய சிலைகள்

பெரிய்ய்ய்ய சிலைகள்


PUBLISHED ON : ஜூன் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில் பல இடங்களில் உயரமான சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நாட்டின் முக்கியமான தலைவர்கள், கலாச்சாரச் சின்னங்கள், வழிபாட்டுச் சிலைகள் ஆகியவையே பெரும்பாலும் சிலைகளாக அமைக்கப்படுகின்றன. உலகின் மிக உயரமான சிலை இந்தியாவில் உள்ளது. 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று போற்றப்படும் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலைதான் அது. 'ஒற்றுமை சிலை' (Statue of Unity) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிலையின் உயரம் 182 மீட்டர் (597 அடி). குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா மாவட்டத்தில் உள்ள நர்மதா அணையை ஒட்டியுள்ள சாது பேட் (Sadhu Bet) என்ற பகுதியில் சுமார் 20000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த பிரமாண்டச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகின் பிற உயரமான சிலைகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

'ஸ்பிரிங் டெம்பிள் புத்தா'(Spring Temple Buddha)

சித்தரிப்பு : வைரோகன புத்தா (Vairocana Budhha)

அமைந்துள்ள இடம், நாடு: லுஷான் கவுன்டி, ஹெனான், சீனா. (Lushan County, Henan, China)

153 மீட்டர் (501 அடி)

'உஷிகு டைபுட்சு'(Ushiku Daibutsu)

சித்தரிப்பு : அமிதாப புத்தா (Amitabha Buddha)

அமைந்துள்ள இடம், நாடு: உஷிகு, இபராகி ப்ரிஃபெக்சர், ஜப்பான். (Ushiku, Ibaraki Prefecture, Japan)

120 மீட்டர் (393 அடி)

திருவள்ளுவர் சிலை

சித்தரிப்பு : திருவள்ளுவர்

அமைந்துள்ள இடம், நாடு: கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா.

40.6 மீட்டர் (133 அடி)

'தி மதர்லேண்ட் கால்ஸ்'(The Motherland Calls)

சித்தரிப்பு : தாய்நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்கிற பெண் (Woman Representing Motherland)

அமைந்துள்ள இடம், நாடு: மமாயேவ் குர்கன், வோல்கோகிராம், ரஷியா. (Mamayev Kurgan, Volgograd, Russia.)

85 மீட்டர்(278 அடி)

'கிரைஸ்ட் தி ரெடீமர்'(Christ the Redeemer)

சித்தரிப்பு : இயேசு கிறிஸ்து (Jesus Christ)

அமைந்துள்ள இடம், நாடு: ரியோ டி ஜெனீரோ, பிரேசில்.(Rio de Jeneiro, Brazil)

85 மீட்டர் (278 அடி)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us