sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்

மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்

மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்


PUBLISHED ON : ஆக 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கர்: டேய்ய்ய் முன்னா...! அமெரிக்கா தேர்தல் மாதிரி ரொம்ப பரபரப்பா இருக்குற, என்ன விஷேசம்?

முன்னா: பரபரப்பாவும் இல்ல சொரசொரப்பாவும் இல்ல. ஆமா... இப்போ ஏன் அமெரிக்காவ என்கூட கோக்குற?

ச: நீ பாக்குறதுக்கு அமெரிக்கன் மாதிரி ரொம்ப அழகா இருக்குற அதனாலதான்.

மு: ஆக்ச்சுவலி நான்தான மொக்கை போடணும். நமக்குக் கொடுத்துருக்குற ரோல் என்னன்னு புரிஞ்சு பேசுடா. ஹி.. ஹி... எனக்கு ஒரு சந்தேகம் வருது!

ச: சந்தேகமா..? என்னவா இருந்தாலும் பாத்து பக்குவமா கேளுடா.

மு: தேர்தல்ன்னு வந்தாலே, “சூடுபிடித்தது பிரசாரம்”ன்னு சொல்றாங்களே. அது என்ன சூடு? ஏன் சூடு?

ச: அது வந்து முன்னா... அரசியல் பேசுற வயசு இல்ல இது. அதனால ஃப்ரீயா விடுவோமே.

மு: நல்லா சமாளிக்குற. எவ்வளவு நாளுக்குத்தான் நீயும் ஷார்ப்பாவே இருப்ப! உன்னோட மூளைக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கொடு! ஹா.. ஹா...

ச: பதிலுக்குக் கிண்டல் பண்றயா? நம்மளச் சுத்தி நடக்குற நாட்டு நடப்புகளை எல்லாமே தெரிஞ்சுக்கோடான்னு உன்ன ஊக்குவிச்சது தப்பா?

மு: ஊக்கும் விக்க வேணாம், பாக்கும் விக்க வேணாம். ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுப் பேசி சீரியல் மாதிரி ஆக்கிடாத.

ச: ஆமா... ஆமா... “உணர்ச்சி வசப்பட்டா சிந்திக்குற ஆற்றல் போய்டும், வன்முறை எண்ணங்கள் தோன்றும்”ன்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது.

மு: அடப்பாவிகளா! ஆராய்ச்சி பண்றதுக்குண்ணே ஒரு குரூப் இருக்கும்போல. எல்லாத்தையும் அலசி ஆராய்ச்சி பண்ணிக் காயப் போடுறாங்களே.

ச: இந்த மாதிரி ஆராய்வது புதுசு இல்ல. திருவள்ளுவர் காலத்துல இருந்தே இருக்குடா!

மு: திருவள்ளுவர் திருக்குறள் எழுதுனது மட்டுமில்லாம ஆராய்ச்சி வேற பண்ணியிருக்காரா?

ச: திருக்குறள்ல பொருட்பால் பகுதியில், நட்பியல் பிரிவில், நட்பாராய்தல்ன்னு ஒரு அதிகாரம் வருது. அதுல, 791ல இருந்து 800 வரைக்கும் நட்பு பற்றி ஆராய்ச்சி பண்ணியிருக்காரு!

மு: நல்லவேளை. உணவு செரிக்குற ஆராய்ச்சி, சிந்திக்குற ஆராய்ச்சி மாதிரி வேற ஏதாச்சும் பண்ணிருப்பாரோன்னு பயந்துட்டேன்.

ச: இந்த மாதிரிக் காரணமே இல்லாம பயப்படுறத ஃபோபோஃபோபியா (Phobophobia)ன்னு சொல்லுவாங்க.

மு: அடேய்ய்ய்ய்... போதும்டா!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us