தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பளபள உலோகம்

பளபள உலோகம்

பளபள உலோகம்


PUBLISHED ON : ஜூலை 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உங்கள் வீட்டின் சமையல் அறைக்குப் போயிருக்கிறீர்களா? அல்லது, 'சமைப்பது அம்மாவின் வேலையாச்சே' என்று சொல்கிற நபரா நீங்கள்? சமைப்பது என்பது அம்மாவுக்கானது மட்டுமல்ல, குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்க வேண்டிய வேலை. விஷயத்திற்கு வருவோம். சமையல் அறையில் உள்ள தட்டு, டம்ளர், கரண்டிகள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் பளபளப்பான ஓர் உலோகத்தால் ஆனவையாக இருக்கும். அதன் பெயர், 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' (Stainless Steel). அது துருப்பிடிக்காத இரும்பினால் செய்யப்பட்டது.

இது தனி உலோகம் இல்லை, கலப்பு உலோகம். இரும்பையும் குரோமியத்தையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தால் 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' கிடைக்கிறது.

இது, 1913ல் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிப்பாளர், 'ஹாரி பிரியர்லி' (Harry Brearley) என்ற பிரிட்டிஷ்காரர். இவர் பீரங்கிக் குழாய்கள் செய்கிறவர். பீரங்கிக் குழாய்கள் வெயில், மழைக் காலங்களில் துருப்பிடித்துவிடும். இதைத் தடுப்பதற்காக, பிரியர்லி பல உலோகங்களை உருக்கிக் கலந்து தொடர்ந்து ஆய்வு செய்தார். அப்படிச் செய்த ஓர் ஆய்வின்போது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதே 'துருப்பிடிக்காத இரும்பு' (Rustless Steel). இவர் இரும்புடன் 4 சதவீதம் குரோமியம் கலந்த உலோகத்தால் ஒரு பீரங்கிக் குழாயை வடிவமைத்தார். அந்த பீரங்கிக் குழாய்கள் துருப்பிடிக்காமல் இருப்பதைக் கண்டார். இரும்புடன் கலக்கப்படும் குரோமியம் அதைத் துருப்பிடிக்கவிடாமல் ஒரு மேல் பூச்சாக இருந்து காப்பாற்றுகிறது.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் பல வகைகள் உண்டு. இரும்புடன் குரோமியம், நிக்கல் சேர்ந்த நைக்ரோம் (Nichrome) சமையல் அறை 'சிங்க்'கில் பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து தண்ணீர் உபயோகம் இருந்தாலும் இது துருப்பிடிக்காது. இரும்புடன் 13 சதவீதம் குரோமியம் சேர்ந்தால் வலிமையானதாக இருக்கும். கத்தி போன்ற வளையாத வலிமையான உலோகங்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் உருவாக்கப்படுகின்றன.

வீடுகளில் பயன்படுத்தப்படும் எவர்சில்வர் பாத்திரங்களும் இந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வகையைச் சேர்ந்தவைதான். இப்போது வாஷிங் மெஷின், கிரைண்டர், ஓட்டல்களிலும் வீடுகளிலும் வைக்கப்படும் சிம்னிகள் (புகைபோக்கி) போன்றவற்றிலும் இது பயன்படுகிறது. மின் பொருட்களில் கூட இரும்பு ஸ்குரூக்களுக்கு பதில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்குரூக்கள் வந்துவிட்டன. நாற்காலி, பஸ் நிலையங்களின் மேற்கூரை என ஸ்டெயின்லெஸ் ஸ்டீலின் ஆதிக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.

எல்லாம் சரி, நீங்கள் வீட்டின் சமையல் பணிகளில் அம்மாவிற்கு உதவி செய்து பாருங்கள்! சமையல் இன்னும் கூடுதலாக ருசிக்கும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us