PUBLISHED ON : டிச 03, 2018

அ நிறம் | அளவு
கேரள வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை மீட்ட கேப்டன்களுக்கு, சிங்கப்பூர் அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது. சமீபத்தில், கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், அந்த மாநிலத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில், ஆலுவா செங்கமனநாடு பகுதியில், செய்வதறியாது, மொட்டை மாடியில் சிக்கித்தவித்த சஜிதா என்ற நிறைமாதக் கர்ப்பிணிப் பெண், ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டார். இந்தப் பாராட்டுக்குரிய செயலைச் செய்தவர்கள், இந்திய கப்பல்படையின் கேப்டன் விஜய் வர்மா மற்றும் கேப்டன் ராஜ்குமார் ஆகியோர். இவர்களின் வீரச் செயலைக் கௌரவிக்கும் வகையில், சிங்கப்பூர் அரசு, 'டைம்ஸ் ஆஃப் சிங்கப்பூர்' என்ற விருதை வழங்கி பாராட்டியுள்ளது.
