PUBLISHED ON : ஏப் 23, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவில் ஏற்பட்டுள்ள திறமைப் பற்றாக்குறையால், புதிய தொழில் தொடங்கப்படுவதில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 'இந்தியக் கல்வி முறை, பிரச்னைக்குத் தீர்வு காணும் பயிற்சியை மாணவர்களுக்கு வழங்குவதில்லை. நாட்டின் 80 சதவீதம் இளைஞர்கள் எந்த வேலைக்கும் பயிற்சி பெற்றவர்களாக இல்லை. தொழில் தொடங்க நல்ல சூழலை வழங்குவதில் அரசுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆனால், இந்திய வரி அமைப்பு மற்றும் சிக்கலான பல்வேறு அரசு நடைமுறைகளால், புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத்துறை வளர்ச்சியால், நிறைய வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்துள்ளார்.