PUBLISHED ON : செப் 22, 2025
தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் என்பது தகவல்களை நீண்ட தூரத்திற்கு அனுப்பவும், பெறவும் பயன்படுத்தப்படும் சாதனம் அல்லது அமைப்புகளாகும். தொலைபேசி, இணையம், வானொலி, தொலைக்காட்சி, செயற்கைக்கோள் தொடர்பு ஆகியவை தொலைத்தொடர்பின் முக்கிய உதாரணங்கள். கீழே சில தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை எந்தவகை தொழில்நுட்பங்கள் என்பதைச் சரியாகப் பொருத்துங்கள்.
1. வைஃபை (Wi-Fi) - அ. செல்லுலார் நெட்வொர்க் தொழில்நுட்பம் (மொபைல் நெட்வொர்க்)
2. புளூடூத் (Bluetooth) - ஆ. செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிசெலுத்தல் (navigation)தொழில்நுட்பம்.
3. 5G - இ. ஒளி சமிக்ஞைகள் மூலம் தரவை அனுப்பும் தொழில்நுட்பம்.
4. GPS - ஈ. கம்பியில்லா (wireless) தொழில்நுட்பம்.
5. ஃபைபர் ஆப்டிக்ஸ் - உ. குறுகிய தூர இணைப்பு தொழில்நுட்பம். ( Fiber Optics)
விடைகள்:
1. ஈ. கம்பியில்லா (wireless) தொழில்நுட்பம்.
2. உ. குறுகிய தூர இணைப்பு தொழில்நுட்பம்.
3. அ. செல்லுலார் நெட்வொர்க் தொழில்நுட்பம் (மொபைல் நெட்வொர்க்)
4. ஆ. செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிசெலுத்தல் (navigation) தொழில்நுட்பம்.
5. இ. ஒளி சமிக்ஞைகள் மூலம் தரவை அனுப்பும் தொழில்நுட்பம்.