sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/மெது மெது கோழிக் குஞ்சு...

மெது மெது கோழிக் குஞ்சு...

மெது மெது கோழிக் குஞ்சு...


PUBLISHED ON : ஜூலை 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 11, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்வெட்டர் பின்னும் உல்லன் நூலில் விதவிதமான மெது பொம்மைகள் செய்யலாம். இந்த வாரம் குட்டிக் கோழிக் குஞ்சு செய்து அழகு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1. மஞ்சள் நிற உல்லன் நூல்

2. கூக்லி கண்கள்

3. ஆரஞ்சு நிற ஃபோம் தாள்

4. மெல்லிய குச்சிகள் அல்லது பேனா ரீபில் 2

5. கத்தரிக்கோல்

6. பசை

இரண்டு விரல் அகலத்திற்கு உல்லன் நூலை 100 சுற்றுகள் சுற்றிக்கொள்ள வேண்டும். சுற்றுகளின் உட்புறமாக, மேலும் கீழும் இரண்டு குச்சிகளைச் செருக வேண்டும்.

சுற்றுகள் கலைந்து விடாமல் விரல்களில் இருந்து கவனமாக நூல் கட்டைக் கழற்றி, நடுவில் நூலால் இறுகக் கட்டிவிட வேண்டும். கட்டிய நூலை சிறிது நீளம் விட்டு வெட்டிவிடவும் .

குச்சிகள் செருகி இருக்கும் இரு செண்டுகளிலும் நூலைப் பாதியாக வெட்டிவிட்டால் பந்துபோன்ற அமைப்பு கிடைத்துவிடும். பந்தின் மேற்பரப்பு ஓரளவு சீராக இருக்குமாறு நூலைக் கத்தரித்து விட்டால், தலை பகுதிக்கான உல்லன் பந்து தயார்.

இதே முறையைப் பின்பற்றி மூன்று விரல் அகலத்தில் நூலைச் சுற்றி, சற்று பெரிய ஒரு பந்தைத் தயார் செய்தால் கோழிக் குஞ்சின் உடல் பகுதியும் தயார்.

தலை மற்றும் உடல் பகுதியை ஒன்றாகக் கட்டி எஞ்சிய நூலை வெட்டி விடவும்.

ஃபோம் தாளில் கால்கள் மற்றும் மூக்குப் பகுதிகளை வரைந்து வெட்டிக் கொள்ளவும்.

தலைப் பகுதியில் கண்கள் மற்றும் மூக்கையும், உடல் பகுதியின் அடிப்புறத்தில் கால்களையும் ஒட்டி விடவும்.

அழகிய கோழிக் குஞ்சு கைகளில் தவழும் அழகை ரசியுங்கள்!

-ஓவியா டீச்சர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us