தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/டீ ஸ்பூனில் இத்தனை வகைகளா?

டீ ஸ்பூனில் இத்தனை வகைகளா?

டீ ஸ்பூனில் இத்தனை வகைகளா?


PUBLISHED ON : செப் 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனீர் கரண்டியும் (டீ ஸ்பூன்) மேஜைக் கரண்டியும் (டேபிள் ஸ்பூன்) நம் இந்தியச் சமையலறையில் அதிகம் பயன்படுபவை. டேபிள் ஸ்பூன், டீ ஸ்பூனைவிட சற்று பெரியது. பிரிட்டிஷார் நம் சமையலறைக்குக் கொண்டுவந்து கொடுத்த கருவிகள் இவை.

டீ ஸ்பூன்

சமையலறையில் பயன்படும் ஸ்பூன், கத்தி, முள்கரண்டி (ஃபோர்க்) போன்ற பொருட்களில் மிக முக்கியமானது டீ ஸ்பூன். ஆரம்ப காலத்தில், தேனீர் தயாரிப்பின்போது, சர்க்கரையைக் கலப்பதற்கு டீ ஸ்பூன் உபயோகத்துக்கு வந்திருக்க வேண்டும். இப்போது எல்லா உணவுப்பொருட்களைக் கலப்பதற்கும் பயன்படுகிறது. இதை ஆங்கிலத்தில் tsp என்று குறிப்பிடுவது வழக்கம்.

ஒவ்வொரு நாட்டிலும் டீ ஸ்பூனின் அளவு ஒவ்வொரு விதமாக வேறுபடுகிறது.

டீ ஸ்பூன் வகைகள்!

1. டெசர்ட் ஸ்பூன்ஸ் (Dessert spoons), இது டீ ஸ்பூனைவிட சற்று பெரியது.

2. காபி ஸ்பூன்ஸ் (Coffee spoons), டீ ஸ்பூனைவிட அளவில் சிறியது.

3. ஐஸ்டு டீஸ்பூன் (Iced tea spoons)-, மிக நீண்ட பிடியைக் கொண்டிருக்கும்; ஐஸ்கிரீம் சாப்பிடப் பயன்படும்.

4. கிரேப் ப்ரூட் ஸ்பூன் (Grapefruit spoon),- பார்ப்பதற்கு டீ ஸ்பூன் போலவே இருக்கும். ஆனால், முனைப்பகுதிகள் கூராக இருக்கும். இதைப் பயன்படுத்தி திராட்சையில் இருக்கும் சதைப்பகுதியை மட்டும் அழகாக எடுத்துச் சாப்பிட முடியும்.

கிரேப் ப்ரூட் ஸ்பூனைப் போலவே, 'ஆரஞ்சு ஸ்பூன்' என்கிற ஒரு வகை ஸ்பூனும் உண்டு. ஆரஞ்சு சுளைகளை எடுத்துச் சாப்பிட இந்த ஸ்பூன் உதவும்.

டேபிள் ஸ்பூன்: உணவைத் தயாரிக்கவோ, சில சமயங்களில் உணவைப் பரிமாறவோ டேபிள் ஸ்பூன் பயன்படுகிறது. இதை ஆங்கிலத்தில் Tbsp என்று சுருக்கமாக அழைப்போம். இதுவும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு அளவீட்டைக் கொண்டிருக்கும்.

- கொக்கோ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us