தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/விண்வெளி குப்பையை அழிக்க விண்கலம்

விண்வெளி குப்பையை அழிக்க விண்கலம்

விண்வெளி குப்பையை அழிக்க விண்கலம்


PUBLISHED ON : டிச 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விண்வெளியில் உள்ள குப்பையை அழிக்கும் வகையில், ஜப்பான், சரக்கு விண்கலம் ஒன்றை அனுப்பி உள்ளது. இந்த விண்கலத்துக்கு, கோனோடோரி (Kounotori) என்று பெயர். இந்த விண்கலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி, ஆய்வு மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகளுக்கு, உணவு, உடை, நீர் உள்ளிட்ட பொருட்களுடன் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பொருட்களை வினியோகித்தவுடன், விண்வெளியில் சுற்றும் குப்பையை, புவி வட்டப் பாதைக்குள் இழுத்து, அவற்றை எரிக்கும் வேலையை, விண்கலம் செய்யும். இதுதொடர்பாக, விண்வெளி ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:

விண்வெளியில், நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்கள் ஏவப்படுகின்றன. பழுதடைந்த செயற்கைக்கோள்கள், ஆயுட்காலம் முடிந்த செயற்கைக்கோள்கள் என, 10 ஆயிரம் கோடி கிலோ எடையுள்ள குப்பை, விண்வெளியில் மிதக்கிறது. இந்த விண் குப்பையை அழிக்கும் சோதனை முயற்சியாக, கோனோடோரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, 10 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, 700 அடி அகலத்துக்கு, நவீன உலோக வலை தயாரிக்கப்பட்டுள்ளது. அது குப்பையை சேகரிக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us