உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 01, 2016

அ நிறம் | அளவு
ஜன. 26 குடியரசு தின விழாவை ஒட்டி 'தமிழக முதல்வரின் சிறப்பு விருதுகள்' வழங்கப்பட்டன. இதில், பெண் விவசாயி 'பிரசன்னா' என்பவருக்கு சிறப்பு விருது கிடைத்தது. இந்த விருது, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பதக்கமும் கொண்டது. மதுரை மாவட்டம், திருப்பாலையைச் சேர்ந்தவர் பிரசன்னா. திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதிக அளவு மகசூல் எடுத்ததற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டது.
