உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 24, 2018

அ நிறம் | அளவு
தமிழகப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுக்குப் பின் விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை விடுமுறை நாட்களில் பள்ளிகளில் 'நீட்' சிறப்பு வகுப்புகளை நடத்த, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 413 மையங்களிலும், நீட் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையில் இச்சிறப்பு வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. சிறப்பு வகுப்புகளின் போதே, அரையாண்டுத் தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைத்தாள்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில், இப்படியான சிறப்பு வகுப்புகள் மூலம், தங்களுடைய பணிச்சுமை பெருகுவதாக ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
