தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/விளையாட்டுதான் பெஸ்ட்! வாசிப்புதான் ரெஸ்ட்!

விளையாட்டுதான் பெஸ்ட்! வாசிப்புதான் ரெஸ்ட்!

விளையாட்டுதான் பெஸ்ட்! வாசிப்புதான் ரெஸ்ட்!


PUBLISHED ON : ஜூலை 16, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல்வி பயில்வது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதுதான். அதேசமயம், கல்வி தவிர பிற விஷயங்களையும் அறிந்து வைத்திருப்பது நல்லது. விருப்பங்களும், திறமைகளும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் உண்டு. விளையாட்டு, செய்முறைப் பயிற்சி (Do It Yourself), புத்தக வாசிப்பு இவற்றில் உங்களுக்கு எதில் ஆர்வம் அதிகம்? எனக் கேட்டோம். சென்னை, மடிப்பாக்கம், சாய் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் அசத்தல் பதில்களில் இருந்து...

மூ.ஆ. ரயீஸ் அஹம்மத், 9ஆம் வகுப்பு

எனக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ரொம்பப் பிடிக்கும். அதுல சின்னச்சின்னதா பரிசோதனைப் பொருட்களைச் செஞ்சு பார்ப்பேன். பாட்டரியை வெச்சு சில பொருட்களை செஞ்சிருக்கேன். எங்க ஸ்கூல்ல வாரத்துக்கு ஒருமுறை செய்முறைப் பயிற்சி, ஒவ்வொரு வகுப்புக்கும் கொடுப்பாங்க. அதுல சிறப்பா இருக்கறதை, ஸ்கூல்ல நடக்கற எக்ஸிபிஷன்ல வைப்பாங்க. அதுல நான் செஞ்ச பொருட்களும் வந்திருக்கு. இது சந்தோஷமா இருக்கும்.

எ.ஜே. பெர்னார்ட் ஜோசப் சாமுவேல், 9ஆம் வகுப்பு

எனக்கு விளையாட்டுதான் ரொம்பப் பிடிக்கும். அது பெரிய 'ஸ்ட்ரெஸ் பர்ஸ்ட்டர்'. தொடர்ந்து படிச்சு ரொம்ப சோர்வா இருக்கும்போதெல்லாம் கொஞ்சநேரம் விளையாடினா போதும். புத்துணர்ச்சியும் சுறுசுறுசுறுப்பும் கிடைக்கும். வார விடுமுறைகள்ல என் அண்ணனோடயும், நண்பர்களோடயும் ரெண்டு மணிநேரம் கிரிக்கெட் விளையாடுவேன். விளையாட்டு உடலுக்கு நல்ல உடற்பயிற்சியும்கூட. அதனால விளையாட்டுதான் என்னோட பர்ஸ்ட் சாய்ஸ்.

ம. முத்துப்பிரியதர்ஷினி, 9ஆம் வகுப்பு

எங்க வீட்ல நிறைய புத்தகங்கள் வாங்குவாங்க. அதனால சின்ன வயசில இருந்தே புத்தகங்கள் படிக்கற பழக்கம் உண்டு. நீதிக்கதைகள் ரொம்பப் பிடிக்கும். காமிக்ஸ் அவ்வளவா படிக்கறதில்ல. சாதனையாளர்கள், சுயவரலாறு புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். அந்தப் புத்தகங்களை படிக்கறப்ப இன்ஸிபிரேஷனா இருக்கும். நாமும் அவங்களைப்போல சாதிக்கணும்ங்கிற உத்வேகம் கிடைக்கும். புராணக் கதைகளை படக்கதையா படிச்சுத் தெரிஞ்சுக்குவேன். ஜெய் புக்ஸ் ரொம்பப் பிடிக்கும். பாடப்புத்தகத்துல வர்ற விஞ்ஞானிகள் வாழ்க்கை வரலாறுகளைப் புத்தகங்கள் மூலமா தெரிஞ்சுக்குவேன்.

மு. ஸ்ரீராமன், 9ஆம் வகுப்பு

எனக்கு பேட்மின்டன் விளையாட ரொம்பப் பிடிக்கும். தினமும் கொஞ்சநேரம் விளையாடுவேன். அது தியானம் செய்யறதுபோல நல்ல மன அமைதியைத் தரும். எங்க வீட்லயும் நான் விளையாடறதை ரொம்ப ஊக்குவிப்பாங்க. பள்ளியிலயும், விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்தோட கலந்துக்குவேன். படிப்போட கூடவே விளையாட்டுக்கும் நிறைய முக்கியத்துவம் தருவேன்.

சு.ரா. ஸ்ரீதேவி, 9ஆம் வகுப்பு

கோ - கோ விளையாட ரொம்பப் பிடிக்கும். விளையாடிட்டு வந்து படிச்சா நல்லா எனர்ஜிட்டிக்கா இருக்கும். விளையாட்டுக்குன்னு தனியா கோச்சிங் கிளாசெல்லாம் போகல. எனக்கு கிரிக்கெட் விளையாட்டும் பிடிக்கும். மேட்ச் நடக்கும்போதெல்லாம் மிஸ் பண்ணாம பார்த்துடுவேன். செய்முறைப் பயிற்சியும் செய்வேன். காகிதத்துல பொம்மைகள் செய்யறது பிடிக்கும். அதேபோல ஸ்ட்ரா, ஐஸ்கிரீம் ஸ்டிக் இதையெல்லாம் பயன்படுத்தி பல வடிவங்களைச் செய்திருக்கேன்.

ஹ. ஸ்ரீலஷ்மி, 9ஆம் வகுப்பு

பாடப்புத்தகம் தவிர எனக்குப் பிடிச்சது புத்தக வாசிப்புதான். தமிழ், ஆங்கிலம், இந்தி புத்தகங்கள் நிறைய படிப்பேன். எனக்கு பழைய கால கட்டட அமைப்புகளைப் பத்தித் தெரிஞ்சுக்கப் பிடிக்கும். ஆர்க்கியாலஜியில ரொம்ப இன்ட்ரஸ்ட் உண்டு. பழைய கோட்டைகள், நினைவுச் சின்னங்கள் பத்தின தகவல்களையெல்லாம் புத்தகங்களில படிச்சுத் தெரிஞ்சுக்குவேன். நிறைய புத்தகங்கள் படிக்கறதால எனக்கு மொழி அறிவும் அதிகமாகுது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us