PUBLISHED ON : மே 30, 2016

மனித உடல் உறுப்புகளில் முக்கியமானது முதுகெலும்பு. முதுகெலும்பு வாதம் (ஸ்பைன் பாராலிசிஸ் / Spine Paralysis) ஏற்பட்டால் சரி செய்ய முடியாத நிலையே இதுவரை இருந்தது. செயற்கை முதுகெலும்பு பொருத்தும் முறை தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எலும்பியல் துறை ஆராய்ச்சியாளர்கள் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளனர். 'பயோனிக் முதுகெலும்பு' (Bionic Spine) எனப்படும் இந்தத் துண்டை, பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ரத்த நாளங்களுக்கு இடையில் பொருத்துவதன் மூலம் முதுகெலும்பு செயல்படும். சுமார் 3 சென்டிமீட்டர் அளவுள்ள இந்த முதுகெலும்புத் தண்டு, கழுத்துப் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் மூலமாகச் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் முதுகெலும்பு வாதம் ஏற்பட்ட பகுதியில் உணர்ச்சிகளை அறியும் திறனும், இயங்குவதற்குத் தேவையான சமிக்ஞைகளைக் கடத்தும் திறனும் ஏற்படும். அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று.
