தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்


PUBLISHED ON : செப் 17, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மின்சாரம் நமது அடிப்படைத் தேவைகளில் ஒன்று. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்கும்விதமாக இயற்கை மூலங்களில் இருந்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் பெறப்படுகின்றன.

காற்றாலை (Windmill)

பண்டைய காலத்தில் காற்றாலைகள், பயிர்களை அரைக்கவும், தேங்கிய தண்ணீரை வெளியேற்றவும் பயன்பட்டு வந்தன.

அதன் வளர்ச்சியாக, தரை, கடல் பகுதிகளில் கிடைக்கும் காற்றின் வேகத்தைப் பயன்படுத்தி காற்றாலைகள் மூலம் மின்சாரம் பெறும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்படுவதில்லை.

செயல்படும் விதம்

உயரமான உலோக கோபுர உச்சியில் சுழலும் இறக்கைகள் பொருத்தப்பட்டிருக்கும். காற்றின் விசை இந்த இறக்கைகளின் மீது படும்போது அவை சுழன்று காற்று சக்தியை இயந்திர சக்தியாக மாற்றும். இந்த சக்தி மின் உற்பத்தி இயந்திரத்தை இயங்க வைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

காற்றாலை மின் இயந்திரம், உற்பத்தி செய்யும் மின்சாரம் நேரடியாக மின் வாரியத்தின் கட்டமைப்புக்குள் செலுத்தப்படுகிறது. கோபுரத்தின் அடியில் தானாக இயங்கும் மின்னணுக் கட்டுப்பாட்டுக் கருவியின் மூலம் மின் காற்றாலையின் முழு இயக்கமும் கட்டுப்படுத்தப்படுகிறது.

ப.கோபாலகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us