
கோடைக்காலத்தை எதிர்கொள்ள பல்வேறு பயிற்சி வகுப்புகள் சென்றால் மட்டும் போதுமா? உணவுப்பொருட்களிலும் சுவாரசிய மாற்றங்கள் தேவை. நீங்கள் கோடையிலும் சோர்வின்றி உற்சாகமாக ஜில் ரெசிபிகள் இதோ...
வாழைப்பழம் -தேன் ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் - 1 பெரியது (உறையவைக்கப்பட்ட, துண்டுகளாக்கப்பட்டது)
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
மால்ட் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
ஸ்கிம்டு மில்க் - 1½ கப்
செய்யலாமா?
வாழைப்பழம், தேன், மால்ட் பவுடர் மற்றும் பால் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஸ்மூத் ஆகும்வரை பிளண்ட் செய்து டம்ளர்களில் ஊற்றி பரிமாறுங்கள். விட்டமின்கள் நிறைந்த குளிர்ச்சியான பானம் இது. கூடுதல் சுவைக்கு ஒரு சிட்டிகை லவங்கப் பட்டைத் தூள் சேர்த்துக்கொள்ளவும். வாழைப்பழத்துக்கு பதிலாக ஒரு கப் மாம்பழம் அல்லது ஸ்ட்ராபெர்ரி கூட சேர்த்துக் கொள்ளலாம்.
ஆப்பிள் இஞ்சி ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்
ஆப்பிள் -1 (மேல்தோல் நீக்கப்பட்ட, விதை நீக்கப்பட்ட, துண்டுகளாக்கப்பட்டது)
இஞ்சி - ½ இஞ்ச் (தோல் நீக்கப்பட்டது)
லைம் ஜூஸ் - 2 லைம்களின் ஜூஸ்
தேன் - ¼ கப்
தண்ணீர் - 1 கப்
ஐஸ் - 1 கப்
செய்யலாமா?
அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ஸ்மூத் ஆகும் வரையில் பிளண்ட் செய்யவும். சுவையும் சத்துகளும் நிறைந்த ஸ்மூத்தி இது.

